பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

நெஞ்சக்கனல்


நாளை உலகத்திற்கும் கமலக்கண்ணனுக்குமே தெரியாதவராகப் போய்விடலாம். ‘அடுத்த தேர்தலில் யார் எப்படி ஆவார்கள் என்பதை இப்போது சொல்ல முடியாதல்லவா?’ என்று ஆறுதலாக எண்ணினார் கமலக்கண்ணன்.

5

மலக்கண்ணன் மந்திரி விருத்தகிரீசுவரனுக்கு ஃபோன் செய்து பேசிய இரண்டு நாட்களுக்குப் பின் அவரையே கடம்பவனேசுவரர் கோவில் புனருத்தாரணப்பணி ஆரம்ப விழாவில் நேரில் காண நேர்ந்தது. நேரில் சந்தித்தபோது மந்திரியும் கூடக்கமலக்கண்ணனிடம் தேனாகக் குழைந்தார். உங்களைப் போலிருக்கிற இண்டஸ்டிரிலியஸ்ட்களெல்லாம் பொதுக்காரியங்களிலே இப்படி நிறைய ஈடுபடணும் – என்று கமலக்கண்ணனைத் தூக்கிவைத்துப் பேசினார். கமலக்கண்ணன் அன்று மிகமிக மாறிய கோலத்தில் கோவிலுக்கு வந்திருந்தார். அரை வேட்டியும் இடுப்பில் தூக்கிக் கட்டிய மேலாடையுமாகத் திறந்த மார்புடன் அவரைப் போன்றவர்கள் வெளியில் தென்படுவது. அபூர்வும் தான். ‘ஒரு நாளும் இப்படி வராதவர் இன்று கோவில் காரியத்துக்காக இப்படி வந்திருக்கிறாரே?’– என்று பாமரர்கள் அதையும் வியக்க வேண்டுமென்பது தான் அவருடைய அந்தரங்க ஆசை. ஒரு தலைமுறைக்கு முன் என்றால் ஒரே மனிதன் ஆஸ்திகனாகவும் நாஸ்திகனாவும் கலந்து இருக்க முடியும் என்பது அசாத்தியம் மட்டுமல்ல, அசம்பாவிதமும்கூட. இந்தத் தலைமுறையிலோ அதுவும் கூட முடியும். கமலக்கண்ணன் பக்தியைப்பற்றி அதிகம் தெரியாதவர். ஒரே மனிதன் ரேஸ், சீட்டாட்டம், பரத நாட்டியம், சங்கீதம், மது கடைசியாகக் கொஞ்சம் கடவுள் இவ்வளவின் மேலும் பக்தி செலுத்த முடிந்த தலைமுறை இது. ரேஸ் கிளப்பிற்கும், கோவிலுக்கும் ஒரே சமயத்தில் போயாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ரேஸ் கிளப்பைத் தவிர்க்க முடியாதபடி இருக்கக்கூடியது அவருடைய மனப்பான்மை, பணவசதி என்ற சுகத்தைப் புரிந்து கொண்டுவிட்டவர்களுக்கு அதைவிட பெரிய கடவுள்