பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
59
 


மடங்களும் சமயநிலையங்களும் உலகம் முழுவதும் இப்படிப்பட்ட முறைகளில் மட்டுமே தங்களுடைய சாதுரியங்களை வைத்திருப்பதை விளக்குவதுபோல் நடந்துகொண்டார் அந்தக் காரியஸ்தர். சந்நிதானத்துக்கு முன்னே சென்றதும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி இருவரும் விபூதிப் பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள். பின்பு சாமிகள் கையை ஆசி கூறுவது போல அசைத்ததும் சற்றே தள்ளி இருவரும் அமர்ந்துகொண்டார்கள். காரியஸ்தர் விலகி நின்று கைகட்டி வாய்பொத்தினாற் போன்று பணிவாக இருந்தார். சாமிகள் ஷேமலாப விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்மா, பசு, பதிபாசம், இவைகளையெல்லாம் பற்றிப் பாரமார்த்தியமாக அவர் பேசுவார் என்று கமலக்கண்ணன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக லெளகீகமானவற்றையே அவர் நிறையப் பேசத் தொடங்கினார். சிலவற்றைக் கமலக்கண்ணனே விரும்பவுமில்லை. எதிர்பார்க்கவுமில்லை கமலக்கண்ணன் குடும்பத்தின் சொத்து, தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீடுகள் பற்றி எல்லாம் நேரிடையாகவே தூண்டித் தூண்டிப் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். சாமிகள், அரசியல் பற்றியும், ஊர் வம்புகள் பற்றியும் கூடப் பேசினார்.

“மடத்துக்கு வருகிற பலருக்கு சம்பிரதாயங்களே தெரிவதில்லை. வந்ததும் ஹோட்டல் டேபிள் மாதிரி நினைத்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விடுகிறார்கள். கும்பிட்டுத் திருநீறு வாங்கிப்பூசிக்கொள்ள வேண்டு மென்பதையே மறந்து விடுகிறார்கள். காலம் அப்படிக் கெட்டுப்போயிருக்கு”– என்று கால நிலைமை பற்றியும் சாமிகள் வருத்தப்பட்டுக் கொண்டார்.

“இந்தக் காலத்துப் பெண்கள் எல்லோரையும் போலில்லாமே அம்மா நல்ல குணவதியாகத் தெரியறாங்க”– என்று மிஸஸ் கமலக்கண்ணனுக்கு இருந்தாற் போலிருந்து ஒரு புகழுரையைக் கொடுத்து அந்த அம்மாள் முகத்தை மலர வைத்தார் சாமிகள். ‘துறவிகளும், அரசியல்வாதிகளும் எப்போதுமே சொல்லவிரும்புவதை எப்போதாவது சொல்