பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
நெஞ்சக்கனல்
 


வது போலஅசாதாரணமாகச் சொல்லுவார்கள்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அவருடைய பேச்சு. அங்கு இருவரும் வந்ததிலிருந்து மிஸஸ் கமலக்கண்ணன் பக்கமே அவர் பார்வை அதிகம் நிலைத்திருந்தாற்போலப் புரிந்தது.

“சாமியை ஒருநாள் நம் பங்களாவுக்குப் பாதபூஜைக்கு வரச்சொல்லி இப்பவே அழைச்சிடுங்க”– என்று மிஸஸ் கமலக்கண்ணன் அவர் காதருகே முணுமுணுத்தாள். அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்தால் அவளே துணிந்து சாமிகளிடம் அந்த வேண்டுகோளைச் சொல்லி விடுவாள் போல் தோன்றவே கமலக்கண்ணன் வெளியிட்டார்.

“சாமி ஒருநாள் நம்பவிட்டுக்கு வந்து பெருமைப்படுத்தணும்”– என்று தனக்குத் தெரிந்த அளவு சம்பிரதாயமாக அந்த வேண்டுகோளைக் கமலக்கண்ணன் வெளியிட்டார்.

“எங்கேயுமே அதிகம் போறதில்லே...பார்க்கலாம்’என்று தயங்கியபடி காரியஸ்தர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் சாமிகள். காரியஸ்தர் முகம் மலர்ந்தது.

“சாமி அப்படிச் சொல்லப்படாது...இவங்க விஷயத்திலே கொஞ்சம் கருணை காட்டணும்”–என்றார் காரியஸ்தர். தன்னை வலிய ஃபோன் செய்து அழைத்துவிட்டுத் தான் ஒரு முறைக்காக அழைக்கும் அழைப்பை மட்டும் ஏற்க மறுப்பதுபோல் சாமிகளும், மடத்துக் காரியஸ்தரும் பிகு’செய்வதை உள்ளுர வெறுத்தாலும் அந்த வெறுப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சாமி அவசியம் வரணும் எங்க ஆர்வத்தை ஏமாத்திடப்படாது”– என்று மீண்டும் வற்புறுத்தினார் கமலக்கண்ணன். சாமிகள் தன் வீட்டிற்கு வந்தால் அதைஒட்டி ஒரு பத்துப் பெரிய மனிதர்களுக்குத் தன்னை ஒரு பக்திமானாகவும் நல்லவனாகவும் நிரூபித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கமலக்கண்ணன் மனத்தில் எண்ணங்கள் அந்தரங்கமாக ஓடின. சாமிகளிடம் கடைசியாகவும் தன் வேண்டுகோளை வற்புறுத்தி விட்டுத்தான் வீடு திரும்பினார் கமலக்கண்ணன்.