பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
63
 

ததும், உங்களுக்குச் சகல சம்பத்துக்களும் பெருகி ஐசுவரியம் விருத்தியாகும்’ – என்ற பொருளுள்ள சம்ஸ்கிருத சுலோகம் ஒன்றைக் கணிரென்ற குரலில் பாடிவிட்டு–

“இதை வாங்கிக்குங்கோ குருவாயூரப்பன் ப்ரசாதம் சசலமங்களமும் உண்டாகும்”– என்று சந்தனவில்லையையும் பச்சைக் கற்பூரத் துளையும் சிறிய இலைத்துணுக்கில் வைத்து நீட்டினார். கமலக்கண்ணன்கும்பிட்டு விட்டு அதை வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டார். தாமே ஒடிப் போய்த் தமது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வந்து சர்மாவிடம் கொடுத்தார். சர்மா ஜாதகத்தைக் கால் மணி நேரம் மேலும் கீழும் பார்த்துவிட்டு “இது ராஜயோக ஜாதகம்! ஜாதகனுக்குச் சந்திர தசை குருபுத்தியின் போது மந்திரியாக வரவேண்டிய பாக்கியமிருக்காக்கும்”– என்று ஸ்பஷ்டமாகக் கூறியபோது கமலக்கண்ணனுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. அவர் எதை நினைத்து அல்லும்பகலும் உருகுகிறாரோ அதையே அல்லவா சோதிடரும் கூறிவிட்டார்! “நீங்க தொட்டது பொன்னாகும். எடுத்த காரியம் உடனே வெற்றியடையும். கீர்த்தி அதிவேகமாகப் பெருகிப் பரவும். தேசமெல்லாம் உங்களைக் கொண்டாடப் போகிறது பாருங்கள்”– என்று பூமாரியாகச் சோதிடர் சொறிந்த சொற்கள் எல்லாம் அவரை அப்படியே வான மண்டலத்துக்குத்தூக்கிக் கொண்டு போய்விட்டன. இந்தப் பூமியில் எல்லாரையும் போலத் தானும் ஒருமனிதன் என்று எண்ணுவதை விடத் தெய்வாம்சம் பொருந்தியதோர் அவதாரம் என்றே எண்ணிக்கொள்ளலாம் போலப் பெருமிதம் வந்துவிட்டது அவருக்கு.

“ஃபாரின் டூர்ஸ் எதாச்சும் இருக்கான்னு பாருங்களேன்”– என்று ஒரு மந்திரம் கேட்பது போன்ற தாகத்துடன் சோதிடம் கேட்பதில் வெறிகொண்டு வினவினார் கமலக்கண்ணன். “பேஷா இருக்கு! ஒண்ணா ரெண்டா? ஏகப்பட்ட ஃபாரின் டூர்ஸ் இருக்கே. பூமியில் உள்ள சகல தேசங்களையும் பல தடவை சுத்திவரப் போறேள். பாருங்கோ”– என்றார் சோதிடர் சர்மா. சுதந்திரமடை