பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நெஞ்சக்கனல்


கொண்டு வந்து நீட்டினான். முகத்தைச் சுளித்துக் கொண்டே அதை வாங்கித் தூங்கி எழுந்திருந்த சோம்பலோடு வாசித்தார் கமலக்கண்ணன்.

எஸ்.வி.கே. நாதன், எம்.ஏ என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து -- நாடுகளின் இரண்டு யூனிவர்ஸிடிகளில் ஜர்னலிஸத்தில் விசேட டிப்ள மோக்கள் வாங்கியிருப்பதாகவும் கண்டிருந்தது.

“என் அறையில் உட்காரச் சொல். காபி கொண்டு போய்க்கொடு. நான் முகம் கழுவிக்கொண்டு வருகிறேன். டைனிங் டேபிளில் எனக்கும் காபி வை...”– என்றார் கமலக்கண்ணன். வேலைக்காரன் விரைந்தான்.

கமலக்கண்ணன் முகம் கழுவிக் காபி குடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தபோது வந்திருந்தவரும் காபி குடித்து விட்டுக் காத்திருந்தார். தம்மை மரியாதையாகவும், அடக்கமாகவும் அறிமுகம் செய்துகொண்டு கமலக்கண்ணலுடன் கை குலுக்கினார் வந்திருந்தவர்.

‘க்ளாட் டு மீட் யூ’–என்று முகம் மலர்ந்த கமலக்கண்ணன் -– இரண்டு விநாடி வந்திருந்தவருடைய தோற்றத்தை நிதானமாக அளந்துவிட்டு எதற்காக அவர் வந்திருக்கக் கூடும் என்பதையும் அநுமானித்துக்கொண்டே பின், ஒன்றுமே அநுமானிக்காதவர் போன்ற குரலில்,

“வாட்கேன் ஐ டு ஃபார் யூ ஸார்...”– என்று நாகுக்காக வினவினார். இருவரும் ஆங்கிலத்திலேயே பேச்சைத் தொடர்ந்தார்கள்.

“நீங்க ஏதோ ஒரு டெய்லி தொடங்கப் போறதாக் கேள்விப்பட்டேன். டெய்லி ஜெர்னலிஸ்த்திலே எனக்கு இருபத்தைந்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ரெண்டு வருஷம் லண்டன்லியும் ஆறு வருஷம் நியூயார்க்கிலேயும் இருந்து மாடர்ன் ஜெர்னலிஸத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் பத்து வருஷம் பம்பாயில் மார்னிங் டைம்ஸிலே சீஃப் எடிடரா இருந்திருக்கேன். ஏழு வருஷம் கல்கத்தாவிலே......’ பேப்பர்லே எக்ஸிகியூடிவ் எடிடரா இருந்திருக்கேன். இப்பத்தான் ஊரோட வந்தாச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/74&oldid=1047783" இலிருந்து மீள்விக்கப்பட்டது