பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
73
 

என் செர்வீஸை நீங்க ஏதாவது யுடிலைஸ் பண்ணிக்க முடியுமானாச் சந்தோஷப்படுவேன்...லீடர், கரண்ட்டா பிக்ஸ், எல்லாம் டீல் பண்றதிலே என்னோட சாமர்த்தியம் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களால் எல்லாம் கொண்டாடப்பட்டிருக்கு...”–என்று கூறியவாறே ஒரு பைல் நிறைய சர்டிபிகேட்டுகளையும், உலகப் பிரமுகர்களினது பாராட்டுக் கடிதங்களையும் எடுத்து நீட்டினார் எஸ்.வி.கே.நாதன்.

அந்தப் பாராட்டுக் கடிதங்களையெல்லாம் பார்த்துக் கமலக்கண்ணன் அயர்ந்தே போனார். சர்ச்சில், ரூஸ்வெல்ட், காந்தி, நேரு, சேனநாயகா, அவுன்ஸாங், போன்றவர்களிடமிருந்தெல்லாம் கூடப் பாராட்டுக் கடிதங்கள் வாங்கியிருந்தார் அவர். ஆள் உண்மையாகவே பெரிய ஆள்தான் என்பதைச் சந்தேகமின்றிப் புரிந்து கொண்ட கமலக்கண்ணன் வியப்பில் சிலநிமிடங்கள் என்ன பேசுவதென்றே தெரியாமல் மெளனமாயிருந்தார்.

“என்ன யோசிக்கிறீங்க” -- என்றார் வந்தவர்.

“ஒண்னுமில்லே! நான் நடத்தப்போறது ஒரு சாதாரண தமிழ் டெய்லி நியூஸ் டேப்பர்! உங்க ‘குவாலிபிகேஷன்ஸ்’ எல்லாம் ரொம்ப ரொம்பப் பெரிசா இருக்கேன்னுதான் பார்க்கிறேன்...”

“என் மதர் டங்டமில்தான்! இத்தனை நாள் ஏதேதோ இங்கிலீஷ் பேப்பர்லே உழண்டாச்சு. இனிமேலாவது ரிடயர்ட் லைஃபை இப்படிக் கழிக்கலாம்னு பார்க்கிறேன், உங்களுக்கும் இப்ப இங்கே என்னைவிட ‘க்வாலிஃபைட் ஸீனியர் ஹாண்ட்’ கிடைக்காது...”

“அதெல்லாம் சரிதான்... ஆனால்... வந்து”

“சம்பளம் நெறையக் கேப்பேனோன்னு சந்தேகப் படறாப்பிலே தெரியறது...”

‘சே சே அதெல்லாமில்லே... நான் யோசிக்கிறது என்னன்னா...’

நீங்க ஒண்ணும் யோசிக்கவே வேண்டாம், நம்பிக்கையா எங்கிட்ட விட்டுடுங்கோ, உங்க பேப்பருக்கு ஆறே