பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

நெஞ்சக்கனல்


மாசத்திலே அகில இந்தியப் புகழ் உண்டாக்கிக் காண்பிக்கிறேன்...”

“எனக்கு ரெண்டு நாள் டயம் குடுங்க மிஸ்டர் நாதன்...”

“ஒ எஸ் டேக் யுவர் ஒன் டைம்...”

– இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கலைச்செழியனும் அவரோடு பிரகாஷ் பப்ளிஸிட்டீஸ் உரிமையாளரும் வந்து சேர்ந்தார்கள். கமலக்கண்ணனுக்குப் பிரகாஷ் பப்ளிவிட்டீஸ் உரிமையாளரை அறிமுகப் படுத்தி வைத்தான் கலைச்செழியன். அவர்கள் இருவருக்கும் நாதனை அறிமுகப்படுத்தி வைத்தார் கமலக்கண்ணன்.

இதற்குள் கலைச்செழியன் கையோடு கொண்டு வந்திருந்த துணிப்பையிலிருந்து ஒரு எவர்ஸில்வர் அரிவாள் மணையின் நுனி தெரியவே,

“இதென்ன? அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு கிளம்பிட்டீர்கள்? வீட்டுக்கு வாங்கிக்கொண்டு போகிறீர்களா?” என்று வேடிக்கையாகக்கேட்டார்கமலக்கண்ணன்.

“இதுவா? குட்டி நடிகை குந்தள குமாரியோட பிரத்யேகப் பேட்டிக்காகப் போயிருந்தேன். ‘அது’ காய்கறி நறுக்கறமாதிரியும், சமயல் செய்யிற மாதிரியும்போட்டோப் புடிச்சுப் போடணும்னுபோனா அவங்க வீட்டிலே அரிவாள் மனையே கிடையாதுன்னுட்டாங்க. காய்கறி நறுக்கக்கூட. ஏதோ ‘எலக்ட்ரிக்’லே மிஷின் வந்திருக்குதாமே? அதுதான் அவங்க உபயோகிக்கிறாங்களாம். சிவனேன்னு நானே எவர்ஸில்வர் கடைக்குப்போயி ஒரு அருவாமணை வாங்கிக் கொண்டுபோய்– அந்தப் பொண்ணை உக்கார வச்சிக் காய்கறி நறுக்கற மாதிரிப் படம் புடிச்சேன் ‘எலக்ட்ரிக்’ மிஷின்லே நறுக்கற மாதிரிப் போட்டோ படத்துக்கு எடுக்காதுங்களே?...” என்று கலைச்செழியன் தன் குட்டி நடிகை சம்பந்தமான சாதனையை வியக்கத் தொடங்கியபோது,

“நல்லவேளை நடிகைக்காக நீங்களே கறிகாய் நறுக்கத் தொடங்கி கையைக்காலை வெட்டிக்கொள்ளாமல் பிழைத்தீர்களே! அந்த மட்டில் புண்ணியம்...”– என்றார் நாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/76&oldid=1047785" இலிருந்து மீள்விக்கப்பட்டது