பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

75


“என்ன சார் செய்யிறது ‘மாஸ் அப்பீல்’தான் இன்னிக்குப் பத்திரிகையாருக்கு”– என்றார் கமலக்கண்ணன் கலைச்செழியனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஆவர்.

“மாஸ் அப்பீலாவது மண்ணாங்கட்டியாவது? சும்மா அப்படிச் சொல்லிச் சொல்லி இவங்களாக் கீழே அதல பாதாளத்துக்குப் போயிட்டிருக்காங்க சார். ஒருகாலத்தில் நவகாளி யாத்திரையில் காந்திக்குப் பின்னாலும், அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்துக்குப் பின்னாலும், புண்ணிய நடை நடந்த இந்த நாட்டுப் பத்திரிகை நிருபர்களின் இன்றைய வம்சாவளியினர் குட்டி நடிகைகளையும் குச்சுக் காரிகளையும் தேடிப்போகிற நிலைமை வந்திருப்பது கேவலத்திலும் படுகேவலம். அன்று புனிதமான, பெருமிதமான காரியங்களுக்கு எல்லாம் முதல் அடி பெயர்த்து வைத்த தமிழ்நாடு இன்று மட்டமான கேவலமான காரியங்களுக்கு எல்லாம் உதாரணமாயிருப்பதை எங்கே போய் அழுவது?” என்று கடுமையாக யாரும் எதிர்பாராத நிலையில் சீறினார் நாதன்.

கலைச்செழியனோ, அவனுடன் வந்திருந்த பப்ளி ஸிட்டி ஆசாமியோ நாதனின் இந்தச் சீற்றத்தை ரசிக்க வில்லை. கமலக்கண்ணனின் நிலையோ தர்மசங்கடமாகி விட்டது. இப்படியே பேச்சைத் தொடரவிட்டால் நாதன் எழுந்திருந்து கலைச்செழியனை அறைவதோ, கலைச்செழியன் எழுந்திருந்து நாதனை அறைவதோ, தவிர்க்கமுடியாத தாகிவிடும் என்று தோன்றியது. நாதனைப் பகைத்துக் கொண்டாலும் கலைச் செழியனைப் பகைத்துக்கொள்ளத் தயாராயில்லை அவர். கலைச்செழியனைப் பகைத்துக் கொண்டால் ‘இண்டர்வ்யூவை’ முடிக்காமலே அவன் போய்விடுவானோ என்ற பயம் உள்ளுரக் குறுகுறுத்தது. அந்த நிலையில்,

“அப்போ நான் வர்ரேன். தேவையானால் மறுபடி சந்திப்போம்...”– என்று மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார் நாதன். கமலக்கண்ணனைத் தவிர மற்ற இருவரிடமும் “போய் வருகிறேன்” என்