பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

நெஞ்சக்கனல்

 அப்படியே இது நியாயமுமாகலாம்; நியாயமாகாமலும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய மனோதர்மத்தையே ஒரு நியாயமாக நிறுத்தித் திருவிழாவுக்குக் காப்புக் கட்டிக்கொண்டு கொடியேற்றுவதுபோல் அதனுயரத்தில் என்னுடைய சத்தியமான தேசிய நம்பிக்கைகளை ஏற்றி உயர்த்திவிட்டு இந்த நாவலை எழுதத் தொடங்குகிறேன். இதை இந்தச் சமயத்தில் எழுதுவதற்குச் சிறப்பான காரணம் எதுவும் இல்லை. எந்தச் சமயத்தில் எழுதினாலும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமே; அதுதான் இந்தச் சமயத்திலும் காரணமாக இருக்கிறது; சிறப்பாகவும் இருக்கிறது. இனி. மேலே படியுங்கள்.

ஓ! ஏதோ ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே!

ஆம்! இப்போது நினைவு வருகிறது. இந்த நாவலைப் படிப்பதனால் என்ன இலாபம் என்று உங்களில் சிலர் கேட்கலாம்! அல்லது அப்படிக் கேட்க நினைக்கலாம்.

படிக்காமல் தவற விடுவதனால் நஷ்டம் நிச்சயமாக உண்டு என்று மட்டும் உறுதியாகச் சொன்னால் அப்படிச் சொல்வதற்காக என்னை மன்னிப்பீர்களா?


நா. பார்த்தசாரதி

(மணிவண்ணன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/8&oldid=1015989" இலிருந்து மீள்விக்கப்பட்டது