பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

79


படப்பிடிப்புக்கள் முடிந்து கமலக்கண்ணன், கலைச் செழியன், பிரகாஷ் பப்ளிவிட்டி மூவரும் மீண்டும் அறைக்கு வந்து அமர்ந்தார்கள். பின்னவர் இருவருக்கும் டிபன், காபி வந்தது -– சாப்பிட்டார்கள்.

“சாரை என்ன காரியமா அழைச்சிட்டுவந்திங்களோ?” என்று பிரகாஷ் பப்ளிஸிட்டியைச் சுட்டிக் காண்பித்துக் கலைச்செழியனிடம் தயங்கிய குரலில் மெல்லக் கேட்டார் கமலக்கண்னன்.

“சார் -– அட்வர்டைஸிங் அண்ட் சேல்ஸ் ப்ரமோ ஷன்ஸ்லே ரொம்பப் பெரிய எக்ஸ்பர்ட் பிரகாஷ் பப்ளிஸிட்டி ‘பிரகாசம்’னா மெட்ராஸிலே சினி ஃபீல்டிலேயும் சரி. பிஸினஸ் ஃபீல்டிலேயும் சரி, தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க–” என்று பலமான அடிப்படையோடு தொடங்கினான் கலைச்செழியன் அடிப்படை பலமாகப் பலமாகக் கமலக்கண்ணனுக்கு என்னவோ ஏதோ என்று சந்தேகம் தட்டத் தொடங்கியது.

7

எதிரே வந்து உட்கார்ந்து பேசுகிறவனின் அதிகப் பணிவும், குழைவும், தன்னை எந்த நஷ்டத்துக்கும் ஆளாக்கலாம் என்று முன்னதாகவே எடை போட்டு நிறுத்து நிர்ணயிப்பதில் ஒவ்வொரு வியாபாரியும் கெட்டிக்காரனாகத் தான் இருப்பான். கமலக்கண்ணனோ பிறவி வியாபாரி. கலைச்செழியன் தன்னோடு உடனழைத்து வந்திருந்த ‘பிரகாஷ் பப்ளிஸிட்டி’ பிரசாசத்தைப் ‘பளிச்பளிச்’ சென்று புகழ்ந்து அறிமுகப்படுத்தியபோதே, ‘என்ன காரியத்துக்கு அடிப்போடுகிறார்களோ?’ –- என்று மெல்லச் சந்தேகம் தட்டியது அவருக்கு.

“பிரகாஷ் பப்ளிஸிட்டியைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்...ஆனா...வந்து...” -- என்று தயங்கினாற் போல இழுத்தார் கமலக்கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/81&oldid=1047791" இலிருந்து மீள்விக்கப்பட்டது