பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

87


இல்லே. எந்தப் பத்திரிகையின்னாலும் அது இன்னிக்கு நிலைமையிலே ஏதாவது ஒரு நாள் சினிமாப் பத்திரிகையாகத்தான் ஆகனும் சினிமா இல்லாட்டி டெய்லிதான். ஏது...?” என்றார் பிரகாசம்.

“அதுக்கில்லே...வந்து நான் என்ன அவ்வளவு பெருமைக்குத் தகுதியா?” என்று கிளுகிளுத்தாள் மாயா.

“இப்படிச் சொல்றதே உங்களுக்குத் தகுதிதான்” என்றார் கமலக்கண்ணன்.

கமலக்கண்ணன் வைர நெக்லஸ்ஸைக் கொடுத்த போது மாயா மறுப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.

“சும்மா வாங்கிக்கம்மா! சார் பிரியப்பட்டுக் குடுக்கிறப்ப நீ மறுக்கிறது கொஞ்சங்கூட நல்லா இல்லை” என்று பிரகாசம் கூறிய பின்பே அவள் அதை வாங்கிக் கொண்டாள். கமலக்கண்ணனுக்கும், கலைச்செழியன், பிரகாசம் ஆகியோருக்கும் ஆப்பிள் ஜூஸ் --ஐஸ் போட்டுக் கொடுத்தாள் மாயா.

“உங்க கையாலே கொடுத்ததிலே ஆப்பிள் ஜூஸ் வழக்கத்தைவிடப் பிரமாதமாயிருக்கு...” என்று கமலக்கண்ணனும் கடைசி கடைசியாகப் பேச்சில் அசடு வழியத் தொடங்கினார். அழகிய பெண்ணிடம் அசடு வழியாத சராசரி ஆண்மகனே இருக்கலாகாது என்பது கடவுளின் சூழ்ச்சியோ என்னவோ?

---அங்கிருந்து திரும்பி வெளியேறும்போது காரில், “நான் இங்கே வந்து போனதைப் பற்றி எங்க வீட்டிலே வச்சுப் பிரஸ்தாபிக்க வேண்டாம்...தெரியுதா?” என்று கலைச்செழியனிடமும், பிரகாசத்திடமும் வேண்டிக் கொண்டார் கமலக்கண்ணன்.

“அடேடே! என்னங்க நீங்க? இதுகூடத் தெரியாதுங்களா எங்களுக்கு...? விடிஞ்சி எந்திரிச்சா எத்தினி பெரிய ஆளுங்க கூடப் பழகறோம்?” என்று ஏககாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு இருவரும் ஒரே வார்த்தைகளில் அவருக்குப் பதில் சொன்னார்கள். கமலக்கண்ணனும் உடனே அவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/89&oldid=1047803" இலிருந்து மீள்விக்கப்பட்டது