பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
நெஞ்சக்கனல்
 


“மிஸ்டர் கலை! மாயா வீட்டிலே எடுத்தீங்களே படம்! அதைப் பத்திரிகையிலே கித்திரிகையிலே போட்டுத் தொலைச்சிராதியும்...!”

“நீங்க ஒண்ணு! அவங்க பக்கத்திலே நீங்க கம்பீரமா உக்காந்திருந்த போஸ் ரொம்ப ‘மேட்ச்’ ஆறமாதிரி இருந்திச்சு! அதான் ஒண்னு தட்டி வச்சேன். இதைப் போயிப் பத்திரிகையிலே போடுவாங்களா என்ன? அவ்வளவுக்கு விவரம் தெரியாதவனில்லிங்க... நான் ”

“உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்காகச் சொல்லி வைக்கிறேன். ஞாபகமிருக்கட்டும்.’’

பத்துப்பதினைந்துநாட்களில் முதலமைச்சர் தலைமையில் முதல் பிரதியை கவர்ச்சி நடிகை மாயாதேவி வாங்க ‘தினக்குரல் நாளிதழ்வெளியீட்டுவிழா அமோகமாக் நடை பெற்றது. அதைப்பற்றிய செய்திகளும், படங்களும் வேறு தினசரிகளிலும் தாராளமாக வந்திருந்தன. தினப் பத்திரிகைக்கு உதவியாசிரியர்கள். ஒரு நியூஸ் எடிட்டர், நிருபர்கள் மட்டும் போட்டு விட்டுத் தம் பெயரையே ஆசிரியர் என்ற பதவிக்கு நேரே போட்டுக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். கீழே அச்சகமும் மாடியில் அலுவலகமுமாக அவருடைய கம்பெனி காரியாலயத்திற்கு அருகிலேயே ஒரு கட்டிடம் பத்திரிகைக்குக் கிடைத்திருந்தது. டெய்லியில் வியாழக்கிழமை சோதிடப் பகுதியைக் கமலக்கண்ணனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சர்மாவும், ஞாயிறு சினிமா மலரை வேறொரு புனைப்பெயரில் கலைச்செழியனும், கவனித்துக் கொண்டார்கள். நியூயார்க்கிலும், லண்டனிலும், ஜர்னலிசம் படித்த நாதனைப்போன்றவர்களை அருகில் வரவும் விடவில்லை. பணமும் பத்திரிகைப் பிரசாரமும் அவர் எதிர் பார்த்ததை அவருக்கு மெல்ல மெல்லத் தரலாயின. அப்போது பதவியிலிருந்த—அரசியல் கட்சியில்—அவரும் ஒரு தீவிர உறுப்பினராக வாய்ப்பு வந்தது. அந்தக் கட்சியின் தேசியத் தன்மைகளுக்கும். காந்தீய நெறிகளுக்கும், எதிரான வழிகளில் ஒருகாலத்தில் சென்ற குடும்பமே அவருடையது. என்றாலும் அவரிடமிருந்த பணம்−பத்திரிகை இரண்-