உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

நெஞ்சக்கனல்


இருந்து மறுமொழி வந்ததைக் கேட்டுத் தலைவர் சிறிது நேரம் ஒன்றுமே பேசத் தோன்றாமல் சும்மா இருந்தார். நீண்ட நேரம் அப்படிச் சும்மா இருந்தபின் மெதுவாகப் பதில் பேசத் தொடங்கினார்.

“ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதுதான். ஆனால் அதைச் செய்யறதுக்கு இப்ப என்ன அவசியம்? ஒரு காரியமுமில்லாமே சும்மாச் சும்மா ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி என்ன காரியத்தைச் சாதிக்கப் போறோம்னுதான் தெரியலே. இப்ப என்ன நடக்காதது நடந்திரிச்சு? இதுக்கு ஊழியர் கூட்டத்தைக் கூட்டு வானேன்?”

“அதுக்கில்லீங்க! கட்சி நம்பிக்கையைப் பொது மக்கள் அளவிலே பரப்பறதும், பிரச்சாரம் செய்யிறதும் நாங்க தான்! எங்களுக்கே அதிலே நம்பிக்கையில்லாமப் போயிட்டா அப்புறம் நாங்க எப்பிடி மற்றவங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?”

“உங்களுக்கு அப்பிடி நம்பிக்கை இல்லாமப் போகும் படியா இப்ப என்ன நடந்திடுச்சு? அதைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“எவ்வளவோ நடந்திருக்குங்க இப்பிடி உட்கார்த்தி வச்சுத்தனியே கேட்டா எதுவும் சொல்ல முடியாதுங்க. நின்னு நிதானமா ஊழியர்களைக் கூட்டிப் பேசினா எல்லாமே சொல்லலாம்.”

வேறு வழி இல்லாதகாரணத்தால் அடுத்த ஞாயிற்றுக் கிழமையே ஊழியர் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒப்புக் கொண்டார் கட்சித் தலைவர். ஊழியர் கூட்டத்தைக் கூட்டினால் என்னென்ன கேள்விகள் வரும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. ஆயினும் கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவர் ஏற்பாடு செய்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டியது தவிர்க்க முடியாததாயிற்று.

சுற்றறிக்கையைக் கமலக்கண்ணனும் பார்த்தார். உடனே நகரக் கட்சித்தலைவரை டெலிபோனில்அழைத்து “என்னய்யா இது?திடீரென்றுசொல்லாமல்,கொள்ளாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/94&oldid=1048348" இலிருந்து மீள்விக்கப்பட்டது