பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95


குறிப்பைத் தெளிவாகப் புலப்படுத்துவது எனப் புரியாமல் தவித்தார் புலவர். கமலக்கண்ணனோ அப்போது இத்தகைய கூட்டங்கள், கட்சிகள், மாநாடுகள் ஆகியவற் றையே வெறுக்கும் மனப்பான்மை யோடிருந்தார். எனவே புலவர் தன்னிடமே பணம் பெற்றுக்கொண்டு போய்த்தன் தந்தைக்கு நினைவுவிழா நடத்துவதையும் அந்தக் கணத்திலே வெறுக்கிற நிலையில் இருந்தார் அவர்.

ஆனால் ஒரு காலத்தில் இப்படி இரகசியமாகப் பணம் கொடுத்து விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப் பழக்கப்படுத்தியவரே அவர்தான், புலவருக்கே அந்த வழக்கம் அவரால் தான் பழகியது. இப்போது அவரே மெளனமாக இருந்ததைக் கண்டு புலவருக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் எதிரே தயங்கி நின்றார். கமலக்கண்ணனோ புலவர் நின்று கொண்டிருப்பதைக் கவனிக்காததுபோல் வேறு காரியங்களில் மூழ்கினார் நீண்ட நேரங்கழித்து அவர் மறுபடி தலை நிமிர்ந்தபோது இன்னும் புலவர் நின்று கொண்டிருப்பதைக் கண்டு கோபம் வந்தது அவருக்கு. உடனே ஆத்திரமாகக் கேட்கலானார்.

“என்ன நிற்கிறீர்? அதுதான் நினைவுவிழா நடத்து வதைப்பற்றி எனக்கு ஒன்றும் மறுப்பில்லை என்று சொன்னேனே?”

“அதற்கில்லை...வந்து...விழாச் செலவுகளுக்கு ஒரு நூறு வெண் பொற்காசுகள் தாங்களே தந்து வரும் வழக்கப்படி...”

“வழக்கமாவது ஒண்ணாவது? நான் என்ன படியளக்கிறதாகவா எழுதிக் கொடுத்திருக்கேன்? படிப்பகத்தின் சார்பிலே வசூல் செய்து நடத்தினால் என்ன?”

“அது சரிதான்! ஆனால் இதற்கெல்லாம் எப்படி வசூல் செய்வது?”

“சரி சரி! எப்படி முடியுமோ பார்த்துச் செய்யும். இப்ப எனக்கு நிறைய வேலையிருக்கு. பிறகு பேசலாம்”—என்று புலவரைத் துரத்தினார் கமலக்கண்ணன். புலவர் கமலக்கண்ணனை மரியாதையாக ஒதுங்கி நின்றுகும்பிட்டு