உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

திக்கும் சிவ பூசைக்கும் நடக்க வேண்டியதற்கு ஆயிரம் பூவராகன் வட்டிக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுக்கவும்.

திருவையாற்றிலே யிருக்கிற பண்டார சன்னிதி திருக்கூட்டங்களுக்கும், மயேசுர பூசை செலவுக்கும் ஆயிரத்தைந்நூறு பூவராகன் வட்டிக்கு வைத்து, அதிலே வருகிற வட்டியை மாதம் மாதம் உடனுக்குடனே மயேசுர பூசை செலவுக்குக் கொடுத்து வரவும்.

நான் இரண்டாம் விவாகம் பண்ணின வேதாரண்ணியத்துப் பெண்ணுக்குக் கொடுத்திருக்கிற நகை போக, பிறந்திருக்கிற பெண்ணுக்கு ஐந்தாறு வயது ஆன பிற்பாடு, அதற்குக் கல்யாணச் செலவுக்கும் நகை தட்டுமுட்டுக்கும் ஐயாயிரம் பொன்..........கொடுக்கவும்.

என்னுடைய உடன்பிறந்தாள் மகன் முத்தையா என்கிற புத்தியில்லாத பிள்ளையாண்டானுக்கு அவன் மனைவிர்த்தி நடப்பிவித்துக் கொள்ளுகிறதற்கு ஐயாயிரம் பூவராகன் எங்கேயாகிலும் வட்டிக்கு வைத்து அதில் வருகிற வட்டியை அவனுக்குக் கொடுக்கவும்...........நாராயணப் பிள்ளை மகன் ஐயா பிள்ளைக்கும், அவர் குழந்தைகளுக்கும் பதினாயிரம் வராகன் ரொக்கம் கொடுக்கவும்.

இந்த மட்டும் செலவு போக, குறையிருக்கிறதை எங்கள் தமக்கையாரும், என் பெரிய பெண்சாதியும் சொல்லுகிறபடிக்கு நாராயணப் பிள்ளையவர்கள் நடப்பித்து வரவேண்டும். நான் ஜீவந்தனாயிருக்கும்போது எங்கள் குருக்களையா, அண்ணா இராமலிங்கப் பிள்ளையவர்கள் அறிய விநாயகமூர்த்தி எழுதினது.

இப்படிக்கு,
(Sd) கா. V. பச்சையப்பன்.

(Sd) அண்ணாக் குருக்கள் அறிவேன்.
(Sd) ராமலிங்கம் அறிவேன்.