பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஆறுமுக நாவலரின் ஐந்து முடிவுகள்

நான் ஜயu (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் வித்தியா சாலையிலேயே இங்கிலீஷ் கற்றேன். பிலவu (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனுயினேன்.

பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை; என்னுடைய தமை யன்மார்கள் நால்வரும் இயன்றமட்டும் பொருளும் உத்தி யோகமும் உடையவர்களாயிருப்பவும், அவர்கள் பொரு ளுதவியும் நான் பெறவில்லை. -

இங்ங்னமாகவும், மேற் கூறப்பட்ட விருத்தியை நான் கீலகu) புரட்டாசிமீ (1848) பரித்தியாகஞ் செய்தேன். பார்சிவல் துரை நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது" என்று பலதரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை.

நான் இங்கிலீஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற் றிருந்தும், என்ளுேடு இங்கிலீஷ் கற்றவர்களுள்ளும் எனக்குப் பின் இங்கிலீஷ் கற்றவர்களுள் அநேகர் தங்கள் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண் டும், நானும் என் சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப்பாது சித்திக்கும் என்றறிந்தும், அஃதில்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும், உத்தியோகத்தை விரும்பவில்லை.

தமிழ்க் கல்வித் துணைமாத்திரங் கொண்டு செய்யப் படும் உத்தியோகம் வலிய வாய்த்தபொழுதும், அதையும் நான் விரும்பவில்லை.

கன்னியை, நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங் காது, வீடு விளைநிலம் தோட்டம் ஆபரணம் முதலியவற் ருேடு விவாகஞ் செய்துகொடுக்கும் வழக்கமே யுடையது