பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

என் சென்ம தேசமாகவும், நான் இல்வாழ்க்கையிலே புக வில்லை. இவைகளெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத் தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்.

இப் பேராசையினல் இருபது வருஷ காலம் நான் செய்த முயற்சிகள் பல; அவைகளுள்ளே சித்தி பெற்றவை மிகச் சில.

சைவ சமயிகள் யாவரும் சைவ சமயத்திலே சிரத்தை யுடையவர்களாகித் தங்கள் தங்களால் இயன்ற உதவி செய் தார்களாயின் நான் எடுத்த முயற்சிகளெல்லாம் இதற்கு முன்னரே நிறைவேறிவிடும்; நிறைவேறின், என்னைப் போலவே பிறரும் அங்கங்கே நன்முயற்சிகளைச் செய்வார் கள்; செய்யிற் கல்வியும் சமயமும் தழைத்தோங்கும்.

நல்லூர் க. ஆறுமுக நாவலர். (1868)