பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

வள்ளலாரின் விளக்கப் பத்திரிகை

.ெ -

திருச்சிற்றம்பலம் அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை யென்றும்; சாலைக்கு சமரச சுத்த சன் மார்க்க சத்திய தருமச்சாலை யென்றும்; சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமென்றும் திருப்பெயர் வழங்

குதல் வேண்டும்.

இன்று தொடங்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரது ஆருட்பெருஞ்சித்தி வெளிப்படும் வரைக்கும் ஞான சபைக் குள்ளே தகரக் கண்ணுடி விளக்கு வைத்தல் வேண்டும். பித்தளை முதலியவற்ருற் செய்த குத்துவிளக்கு வேண்டாம். மேலேற்றுகிற குளோப்பு முதலிய விளக்குகளும் வேண்டாம். தகரக் கண்ணுடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதியுள்ள நம்மவர்கள் தேகசுத்தி கரணசுத்தி யுடையவர்களாய் திருவா பிற்படிப்புறத்திலிருந்துகொண்டு விளக்கேற்றி பன்னி ரண்டு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கையிற் கொடுத்தாவது, எழுபத்திரண்டு வயதிற்கு மேற்பட்ட பெரியர் கையிற் கொடுத்தாவது உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்துவரச் செய்விக்கவேண்டும். நாலு நாளைக்கு ஒரு விசை, காலையில் மேற்குறித்த சிறியரைக் கொண்டாயினும் பெரியரைக் கொண்டாயினும் உள்ளே தூசு துடைப்பிக்க வேண்டும். தூசு துடைக்கப் புகும்போது நீராடி சுத்த தேகத்தோடு கால்களில் வத்திரம் சுற்றிக்கொண்டு புகுந்து முட்டிக் காலிட்டுக் கொண்டு துரசு துடைக்கச் செய் விக்கவேண்டும். விளக்கு வைக்கின்றபோதும் இங்ங்ணமே