உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



[ஒரு பொருளைக் கையில் தூக்கியபடியே அதன் எடையைக் கூறும் சாமர்த்தியசாலிகள் உண்டு. அதே மாதிரி, ஒரு மனிதனை ஒரே பார்வையால் அளந்தெடுத்துவிடும் விவேகிகளும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட விவேகிகளுள் ஒருவராகவும், அவசரப்படாத அரசியல்வாதியாகவும், சென்ற நூற்றாண்டில் சிறந்து விளங்கியவர் சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு என்பவர்.

இவர், தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளிலும் நன்றாகப் பேசவும், எழுதவும் வல்லமை பெற்றவர்.

1889-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘திவ்விய தேச யாத்திரை’ என்னும் இவரது பயண நூலே, தமிழகத்தில் முதன் முதலில் வெளிவந்த பயண நூலாகும். அது, நமக்கு மிகவும் பயனுள்ள நூலுமாகும்.

இவர் தம் சொத்துக்களை யெல்லாம் மனைவி மக்களுக்கோ, அண்ணன் தம்பிக்கோ, எழுதிவைக்காமல், அறக்கட்டளைக்கே எழுதி வைத்தவர். கோவையில் இவர் நிறுவிய பிரம்ம சமாஜப் பெண் பாடசாலை இன்றும் நடைப்பெற்று வருகிறது.]


நரசிமலு நாயுடுவின் நாட்குறிப்பு

1885௵ டிசம்பர் ௴ 27, 28, 29, 30-ம் தேதிகளில் பொம்பாய் பட்டணத்தில் கூடும் முதல் காங்கிரசு சபைக்கு எம்மைக் கோயமுத்துார் பிரதிநிதியாகக் குடிகள் தெரிந்தெடுத்து நியமித்தபடியால் 1885௵ டிசம்பர் ௴ 24ம் தேதி மாலை சென்னையிலிருந்து ௸ காங்கிரசு சபைக்குப் புறப்பட மகாராஜராஜஶ்ரீகளாகிய, இரங்கய்ய நாயடவர்கள்,