பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

குஞ்சுமாதேவி இங்கிலீஷ் கல்விக்கு 50000 ரூ, ஜாகோ கல்வி பண்டு 10000 ரூ, கோதார ஸ்கூல் பண்டுக்கு 10000 ரூ, நாலிய ஸ்கூல் பண்டுக்கு 10000 ரூ, தரும வைத்தியம் வக்கீல் பண்டுக்கு 50000 ரூ. ஜமனுபாய் தரும பண்டுக்கு 20000 ரு, மீட்ைசி பாய் பண்டுக்கு 20000 ரு, லக்ஷ்மிநாராயண தருமம் 2000. ரு, மாதுg கங்க பாய் தருமம் 24000 ரு, தரும கட்டிடங்கள் 3,00,000 ரூ, பின்னும் பலவித தருமங்களுக்கும் சேர்ந்து 17, 59, 188-8-10 செலவிட்டிருக்கிருர். இந்தத் தரும பண்டில் சேர்ந்ததுதான் நாங்கள் தங்கிய மாளிகை.

இந்த மாளிகையின் பெருமையை யென்னவென்று சொல்லுவோம். இந்த மாளிகையின் மத்திய ஹால் நீண்டு அகன்று ஆயிரக்கணக்காக ஜனங்கள் தங்கும்படிய ன விசாலமுள்ள மண்டபம். இந்த ஹாலுக்கு வலது பாகத் திலும், இடது பாகத்திலுைம் நூற்றுக் கணக்கான ஜனங் கள் தங்கும்படியான ஹால்களிருக்கின்றன.

இந்த ஹாலுக்கு மேல் மூன்றடுக்கு மெத்தையும் ஹால் களுமிருக்கின்றன. ஹாலுக்கு எதிரில் மானசம் பம்பாதீர்த் தங்களைப் போன்ற ஒர் தடாகமிருக்கிறது. இந்த மாளி கையே சற்று உன்னதமான மலைமேட்டின் பேரில் கட்டப் பட்டிருப்பதினுல் மாளிகையைச் சுற்றிலும் தேவேந்திர வனத்தைப் போன்ற பற்பல புஷ்பச் செடிகளும், மா, வாழை, தென்னை, பலா, பொமணிமாஸ், கொய்யா, கிச்சிலி, முதலான பழந்தரும் விருகrங்கள் கொப்புங் கிளைகளாலும் அடர்ந்து படர்ந்து அவற்றின் கனிகள் பெருத்துப் பழுத்துப் பிடுங்குபவரற்றுத் தொங்கி ஆடிக்கொண்டிருக்கின்றன.

இடைக்கிடை திவ்யமான ஆவி கூபங்கள் அழகாகப் பிரகாசிக்கின்றன. அதற்கப்புறம் விஸ்தாரமான காலிஜா காவும் கக்கூஸ் முதலானதுகளும் சுத்தமாக வைக்கப்பட்டி ருக்கின்றன. தண்ணிர்க் குழாய்கள் எப்போதும் ஜோவென்று கூவிக்கொண்டு திவ்யமான ஜலத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன. மாளிகையின் மத்திய ஹாலின் சுவர்கள் ஸ்படிகக் கற்களால் கட்டியதைப் போலிருந்த