பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உயர்ந்த சோப்புக் கட்டிகளும், ஸ்நானம் செய்து வைக்க வேலைக்காரர்களும், தயாராக இடுப்பைக் கட்டிக்கொண்டே தயாராக யிருந்தார்கள். இப்படி ஸ்நானம் செய்பவர்கள் இஷ்டப் பிரகாரமெல்லாம் ஜலமாட நடைபாவியும் கட்டி யிருக்கிருர்கள். இவ்விதமாக ஸ்நானம் செய்துவிட்டுச் சாப்பாட்டிற்குப் போனல், அந்தச் சமையல் கட்டிடத்தின் விஸ்தீரணத்தையும் சொகுசையும் வசதியையும் சொல்லவும் வேண்டுமோ!

போனவர்களுக் கெல்லாம் பிரம்மாண்டமான வாழை இலைகளைப் போட்டுப் பலவித லட்டுகள், பேணிகள், துடுபேடா, பாலோட நெய்யோட பிருஞ்சுகள், பலவித கனிவர்க்கங்களுடன் கூடை கூடையாக வட்டிப்பதன்றியில், திவ்வியமான அரிசிச் சாதத்தையும், மோர் சாம்பார், பலவித சட்னிகள், காய்கறிகள், கட்டித் தயிர், பால், பாயசம் முதலானவைகளைக் கணக்கு வழக்கின்றிக் கொட்டிக் கொண்டே யிருந்தார்கள். எங்களுக்குக் குஜராத்தி, மராட்டி, இந்துஸ்தானி முதலான அத்தேசத்து பாஷைகள் அடியோடு தெரியாதென்று கண்டு, அத்தே யத்து அந்த பாஷைகள் தெரிந்த பி. ஏ., முதலான பரிவுைகளைக் கொடுத்த பி. ஏ., பட்டம் பெற்றவர்கள் எங்களுக்கருகில் இடுப்பைக் கட்டிக் கொண்டு நின்று எங்களுக்கு எது வேண்டுமென்று சொல்லுகிருேமோ அதைச் சொல்லி வாய் மூடுமுன் உடனுக்குடனே சொல்லியும், செய்வித்தும் கொடுத்துக் கொண்டு யாதொரு குறைவுக்கும் வழியில்லா மல் கவனமாகக் காரியத்தை நடப்பித்து வந்தார்கள்.

சாப்பிட்டானவுடனே சுருட்டுப் பிடிப்போருக்குச் சுருட்டும், உக்கா பிடிப்போருக்கு உக்காவும், தாம்பூலம் போடப்பட்டவர்களுக்குத் தாம்பூலமும் சித்தஞ்செய்து கொண்டு வந்தார்கள். இதன்றியில் கூடிவரம் செய்து கொள் பவர்களுக்குத் தயாராக மாசுநிப்போர்களும் வெளியில் போகவேண்டுமானுல் குதிரைகள் கட்டிய சாரட்டுகளும், சோச்சுகளும் தயார் செய்யப்பட்டிருந்தன. விருந்தாளி