பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

களாகிய எங்களுக்கு இவ்வித மரியாதைகள் செய்வித்தவர் கள் யாவரெனில், இந்த மஹாநாட்டுக்குப் பொம்பாய் பிரதிநிதிகளாக நின்ற கனவான்களே.

அவர்கள் யாவரெனில், சட்ட நிருபண சபையின் மெம்பராகிய கனம் பொருந்திய தாதாபாய் நவரோஜி, சட்ட நிருபண சபையின் மெம்பரும் எம். ஏ., பி. எல்,; பட்டதாரியும், பகவத் கீதையை இங்கிலீஷ் கவிகளில் மொழி பெயர்த்தவரும், கனம் பொருந்திய காசிநாத் டிம்பக் திவாங்கு, பாம்பே முனிசிபல் பிரசிடெண்டும் பாரிஸ்டரு மாகிய மெலர்ஸ் பொரோஜசா மெர்வாஞ்சி மீட்டா, பொம்பாய் பிரசிடென்சி சபையின் காரியதரிசி டின்ஷாஜி, வாட்ஸா, ஐகோர்ட்டு சொலிசிட்டர் டின்ஷாஜி பெஸ் டோன்ஜி காங்கா, ஐகோர்ட்டு வக்கீலாகிய காநக்ஷாம், நீலக்நாத் நாட்கார்னி, ஐகோர்ட்டு சொலிசிடர் முல்லி பவானி தாஸ் பார்பாயா, மகாவர்த்தகர்களாகிய திரிபு வனதாஸ், மங்கல்தாஸ் நாதுபாய், ஜிஹாங்கீர் பிவாச்சா, இராஜனி துலாம் சா, சொலிசிடரும், செரீபுமாகிய வலயானிசா, பாரிஸ்டர் பால்மூங்சீல் வக்கீல், பாரிஸ்டர் ஏ. கே. சூக்ளு, ஸ்பெக்டேடா பத்திரிகாசிரியர் பி. எம். மலபாரி, ஐகோர்ட் வக்கீல் காமிஸ்ராம சந்திரகிர்லோஸ்கர்.

சொலிசிடர், அப்துல்லா மெஹராலி தாராமசி, பெரிய வர்த்தகராகிய ஜவுரிலால் உமயசிங்கர்யாஜி பின்னும் அநேக பெரிய உத்தியோகஸ்தர்களும் வர்த்தகர்களும் இந்தக் கனவான்களுக்குப் பக்கத் துணையாக நின்று இந்தச் சபையை ஸ்தாபிக்கத் தூண்டினவர் மகரிஷியாக விருக்கும் மேஸ்டர் ஹல்ம் என்பவர்.

இவர் அநேக வருஷங்களாக இந்தியா கவரன்மெண்டு செகரிடெரியாக விருந்து இப்போது உபகாரச் சம்பளத் துடன் நமது தேசத்திலே தங்கி நம்மவருக்குதவி செய்ய கங்கணங் கட்டிக்கொண்டு இரவும் பகலும் நமது தேசத்தா ருக்கு உதவி செய்வதே கருத்தாகக் கொண்டு வேண்டிய சாதனங்களைத் தேடி வருகிரு.ர்.