பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(புதுக்கோட்டை அரங்கசாமி பிள்ளை என் பவரே, சீவக சிந்தாமணியின் முதல் ஐந்து இலம் பகங்களை 1883-ல் முதன் முதலாகப் பதிப்பித்தவர். அவரது பதிப்பு வெளிவந்த பின்னர்ே, டாக்டர் உ. வே சாமிநாதையர் நூல் முழுதும் அடங்கிய பதிப்பினை 1887-ல் வெளியிட்டார்.

ஐயரின் பதிப்பில் பல பிழைகள் இருப்பதைக் கண்ட சுன்னகம் முருகேச பண்டிதர் என்பவர் :சீவக சி ந் த ா ம னி வழுப்பிரகரணம்” என் னும் கண்டன நூலொன்றை வெளியிடலாளுர், பண்டிதரின் கண்டனம் சரியில்லையென்ருல், அதனைச் சாமிநாதையரே மறுத்திருக்கலாம். ஆனல் அவர் அவ்வாறு செய்யாமல், தம் மாணவராகிய குட வாயில் சண்முகம் பிள்ளை என்பவரைக் கொண்டு. அதற்கொரு கண்டன நூல் எழுதச் செய்தார். மறுப்புக்கு மறுப்பாக வெளிவந்த அந்நூலைக்கண்ட முருகேச பண்டிதர், உடனே இருவரையும் வெளிப் படையாகவே வாதுக் கழைத்தார்.

வாதுக் கழைத்தவரோ, மறைமலையடிகளா ரைப் போல் ஒவ்வொரு நூலையும் எழுத்தெண்ணிப் படித்தவர். வித்துவான் தியாகராசச் செட்டியா ரையே திகைக்க வைத்தவர். அவரிடம் அகப்பட் டுக் கொண்ட ஐயரும் அவருடைய மாணவரும், புலமைப் பஞ்சம் உடையவர்கள். எனவே, பாரா யணப் பண்டிதராகிய உ. வே. சாமிநாதையரோ, பாத பூஜை செய்த சண்முகம் பிள்ளையோ அவரோடு வாதிட முன்வரவில்லை.

அவர்கள் வாதிட முன்வராமையால், சுன்னுகம் முருகேச பண்டிதர், கீழ்வரும் வாத விளம்பரத்தை 1888-ல் வெளியிட்டார். இவ்விளம்பரம், சென்ற நூற்றுண்டுப் புலவர்களுக்கிடையே நடைபெற்ற: