உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

“சீவக சிந்தாமணிச் சண்டை”யின் வெற்றி தோல்விகளை நமக்கறிவிக்கும் நல்லதோர் இலக்கியச் செய்தியாகும்.]


முருகேச பிள்ளையின்
வாத விளம்பரம்

கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய ஶ்ரீமத் சாமிநாதையரவர்களாவது, அவர்களுடைய மாணாக்கராகிய குடவாயில் ஶ்ரீமான் ஐ. சண்முகம் பிள்ளையாவது, அவர்களைச் சார்ந்த பிறராவது சீவக சிந்தாமணி வழுப்பிரகரணத்தால் காட்டிய பிழைகளை பிழைகளல்ல என்று தக்க நியாயத்தோடு அறிஞர்கள் பலர் கூடிய சபையில் திக்கரித்துக் காட்டுவார்களாகில், சிக்கி நாயக்கன் பேட்டை இராகவாச்சாரியர் அவர்களும் தமது நியாய வாதா பாச நிராகரணத்தில் தாம் ஒப்புக்கொண்டு காட்டிய நியாயங்களையும் ஓர் ஆக்ஷேபத்துக்குமிடமின்றி அச்சபையில் தக்க நியாயத்தோடு தாபித்துக் காட்டச் சித்தமாயிருக்கின்றார்.

“சீவக சிந்தாமணிப் பதிப்பிற் காட்டிய பிழைகளைப் பிழைகளென்றே யாம் ஒத்துக்கொண்டோம். இராகவாச்சாரியரே நியாய வாதா பாச நிராகரண நிறுப்புச் செய்திடுக” என்னினும் தக்கவர்கள் முன்னிலையில் அவ்வாறு செய்தலும் அவருக்குச் சம்மதிதான். ஆதலால் அபிப்பிராயத் தோடு பொது இடமும் நாளும் குறிக்க.”

சர்வதாரி ௵
ஐப்பசி ௴ ௧௬
காஞ்சீபுரம், 1888

இங்ஙனம்,
பூ. முருகேச பிள்ளை.
(சந்திரபானு அச்சுக்கூடம்.)