பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ஆங்கிலேயர்களின் ஆட்சி தென்னுட்டில் நிலை பெற்றபோது, தமிழர்களே முதன் முதலில் செல் வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி யார் தென்னுட்டில் வர்த்தகசாலைகள் அமைத்த போது, அவர்களிடம் முதன் முதலில் நெருங்கிப் பழகியவர்கள் தமிழர்களே.

துபாஷிகளாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற தமிழர்களுக்கு நாட்டிலே செல்வாக்குப் பெருகலாயிற்று. வர்த் தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத் தில் தமிழர்களே நிர்வாக உத்தியோகஸ்தர்களாய் இருந்தனர். ஆகவே, ஆதிகாலத்தில் அரசியல் துறையில் முதலியார், நாயுடு, நாயக்கர், செட்டி யார், பிள்ளைமார் போன்றவர்களே இடம்பெற் றிருந்தனர். தமிழர்கள் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினல் ஆங்கிலேயரின் நன் மதிப்பை வெகு எளிதில் பெற்றனர்.

அதுவரையில், ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழியென்றும் கருதி ஒதுங்கியிருந்த ஒரு சிலர் அரசியலில் தமிழர்களின் ஆதிக்கமும், சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வரு வது கண்டு, தாங்கள் இனியும் அவ்வாறு ஒதுங்கி இருந்தால் தங்கள் சமூகம் வீழ்ச்சியடைவது உறுதி யென உணர்ந்து அவசரம் அவசரமாக ஆங்கில மொழியைக் கற்கவும், ஆங்கிலேயரின் நட்பைப் பெறவும் முனைந்தனர்.

பின்னர் அவர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் மிகமிக விரைவாக முன்னேறினர். சென்னை மாநில