இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34
தியேகமாய் ஸ்தாபித்து நடத்திவருவதால் இவ்வூரிலுள்ள கனதனவான்களும், அன்னியதேசத்து கனதனவான்கள் யாவரும் இப்பாடசாலை விருத்தியடையும்படி முயற்சிக்க அவர்களின் மேலான கனத்தைக் கோருகின்றேன்.
- 9. இங்கிலீஷ் புத்தகங்கள் சர்க்கார் பதிப்பாகவும், தமிழ்ப் புத்தகங்கள் நாவலர் பதிப்பாகவும் உள்ளவைகளை வரவழைத்துப் பாடம் வைத்து நடத்தி வருகிறேன்.
- 10. எளிய பிள்ளைகட்குச் சம்பளமில்லாமலும் புத்தக முதலானவைகளும் தருமத்துக்கு வாங்கிக் கொடுத்து நடத்தப்படும்.
இவ்விளம்பரத்தை ஏனைய பத்திராதிபர்கள் தங்கள் தங்கள் பத்திரிகா ரத்தினங்களில் பிரசுரிக்கும்படி மிக நமஸ்கரித்தேன்.
இங்ஙனம்
ஊழியன்
தி. ச. இராஜகோபால பிள்ளை,
மானேஜர்,
இராஜகோபால ஹிந்து, ரிலிஜியஸ் பாடசாலை.