பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

சூளாமணி யென்னும் புத்தகத்தில் தங்களைப் பற்றியும், '97-வது பேஜில் அவிசாரி மகன் என்று சொல்லியிருப்பதைப் பற்றியும் நான் அச்சிட்டுப் பிரசுரஞ் செய்திருக்கும் மற்றுஞ் சில புத்தகங்களிலும் வைஷ்ணவர்களைப்பற்றி நான் துஷணை யால் எழுதி யிருப்பதைப் பற்றியும், நான் அதிக வியசனப் படுவதுடன் அதைப்பற்றி யென்னை மன்னிக்கும்படி தங்களே ரொம்பவும் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகிறேன். இனி மேல் தங்களையாவது, வைஷ்ணவர்களையாவது அவர்கள் ஆசாரியர்களேயாவது நான் அவதூருய்ப் பேசமாட்டேன், எழுதவுமாட்டேன். தங்களுக்கு மேற்படி வியாச்சியத்தில் நேரிட்ட செலவுக்காகவும் மானநஷ்டத்துக்காகவும் நாளது தேதியில் தங்களுக்கு ரூபா (100.) நூறு செலுத்தியிருக்கிறேன். இந்தக் கடிதத்தைத் தங்களிஷ்ட பிரகாரம் (NEWS PAPERS)களில் பிரசுரஞ் செய்து கொள்ளலாம். இனிமேல் தங்களுக்கும் எனக்கும் இவ்விஷயத்தில் சிவிலிலாவது கிரிமினலிலாவது யாதொரு வியவகாரமும் நடத்தக்கூடாது. இப்படிக்கு நான் என் மனோராஜியில் எழுதிக் கொடுத்த: APOLOGY அல்லது மன்னிப்புப் பத்திரம்.

இப்படிக்கு.

(Sd.) சூ சோமசுந்தர நாயகர்.

சாrதிகள் :

(Sd) APPADORAI MUDALIAR,

ATTORNEY For S. Somasundara Naigar. (Sd.) P. TIRUVENGADASWAMI PILLAI,

ATTORNEY For A. V. Ramanuja N valar,

Complainant”

இந்த அபாலஜி பத்திரத்தையும் இதில் கண்ட ரூபா 100-ம் பெற்றுக் கொண்டேன்.

1891 § o ஜனவரி 黔。} (Sd) ST. வே. ராமாநுஜ நாவலா.