பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

1943-ஆம் ஆண்டுவரையில் தினமணி ஆசிரியராக இருந்து பணியாற்றியவருமாகிய காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்கள், பாரதியின் கவிதைகளில் மிகவும் ஈடுபாடுடையவர்.

ஆகவே, பாட்டுக்கொரு புலவகிைய பாரதி யின் பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டும் என்பதற்காக, அவரும் அவருடைய நண் பர்களும் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் விளக்கமாக இவ்வேண்டுகோள் அமைந்திருக்கிறது )

டி. எஸ். சொக்கலிங்கத்தின் வேண்டுகோள்

பாரதியார் காலஞ்சென்று 10 வருஷங்களாகின்றன. தமிழர் இன்னம் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லே. இது பெரிய ஆச்சரியமல்லவா? இலக்கியம் வளராமல் வாழ்வு உயராது. ஊக்கமும் உணர்ச்சியுமுள்ள வாலிபர்கள், இதற் காகப் பாடுபட வேண்டுமென்று எத்தனையோ வருஷங் களாகச் சொல்லி வருகிருர்கள். ஆனல் ஒன்றும் நடக்க வில்லை.

கடலூர் ஜெயிலில் இருந்தபோது, இந்த வேலைக்காக :தமிழ்ப் பிரசுராலயம்' என்ற பெயருடன் அங்கிருந்த தேச பக்தர்கள் ஒரு கம்பெனி ஏற்படுத்தினர்கள். அந்தக் கம் பெனிக்கு நாமக்கல் பூரீ வெங்கடாசல ரெட்டியாரைத் தலை வராகவும், பூரீமான்கள் கே. சந்தானம், டி. எஸ். அவினாசி லிங்கம், டாக்டர் சாஸ்திரி, பி. எஸ். குமாரசாமி ராஜா, என். எம். ஆர். சுப்பராமன் இவர்களை டைரக்டர்களாகவும், என்னை மானேஜிங் டைரக்டராகவும் நியமித்தார்கள். விடுதலையடைந்த பின்பு நான் எவ்வளவோ முயற்சி செய் தும், ஜெயிலில் தீர்மானித்த விஷயம் இன்னம் உருப்படியாக வில்லை. தமிழரின் துரதிஷ்டமென்றே இதைச் சொல்ல வேண்டும்.