பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

["வெள்ளையனே வெளியேறு" என்று 18-ஆம் நூற்றாண்டிலேயே குரல் கொடுத்தவர் மன்னர் மருது பாண்டியர். அவர் ஒரு சேர்வைக்காரர். ஒளி பொருந்திய பார்வைக்காரர். இரவு நேரங் களில் அவர் ஒரு வேர்வைக்காரர்.

அவருடைய ஆட்சியில், தமிழ் தழைத்துக் கொண்டே இருந்தது. வீரம் விழித்துக்கொண்டே இருந்தது.

பகைவர்களின் சூழ்ச்சியினால், அவர் பதவி யிழந்து, பட்டமிழந்து, சிறிய மறவர் நாடாகிய சிவ கங்கைச் சீமையை இழந்து, காளையார் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த காடுகளில் தலைமறைவாக இருந்து வருகையில் ஒருநாள் ஒரு புளிய மரத்தடியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது பிடிபட்டு 1801-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 10ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். தூக்கில் விடப்படுவதற்கு முன்னர், அவர் மரணவாக்குமூலம் அளித்த தாகக் கூறப்படுகிறது.

கிழக்கிந்தியக் கும்பினியாரின் சேனதிபதியான கலனல் அக்னியூ துரையின் முன்பாக, அவர் இந்த வாக்குமூலத்தைச் சொன்னதாகவும் சொல்லப்படு கிறது.)]

மருதுவின் மரண வாக்குமூலம்

என்னுடைய ஜமீன் வேலுநாச்சிக்குப் பாத்தியமாக இருந்தது. மேற்படியாளை நான் கவியாணஞ் செய்து கொண்டு, அவள் மூலமாக சிவகங்கை ஜமீனுக்குரிய உயில் சாசனம் பெற்றிருக்கிறேன்.