பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

1773-ஆம் ஆண்டில் உயில் சாசனம் பெற்று, மாத்துார் நவாபு அவர்களால் ஜமீனை ஜப்தி செய்து ஏலமாக்கிய பணத்தை நான் கட்டி ஏலத்தை நீக்கி அனுபவித்து வரு கிறேன். என்னைத் தவிர வேறு யாரொருவருக்கும் இதில் பாத்தியமில்லை.

தேவஸ்தானம், பண்ணை, கொள்கிரயம், சோறு தேட்டு, ஆயம், சுங்கம், சாயவேல், உப்பளம் சத்திரங்கள் மடம் இவைகள் என்னல் கிரயத்துக்கு வாங்கப்பட்டன. நானே அனுபவித்து வருகிறேன். இந்தச் சொத்துக்களில் எல்லாம் யாருக்கும் எவ்விதமான பாத்தியமும் இல்லை. நானும் என் வாரிசுகளுமே என்றும் உரிமையான பாத்திய முடைய வர்கள்.

மேலே கண்ட சொத்துக்களை நான் என் சுயார்ச்சிதமா கக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்திருக்கிறேன். நான் பாஞ் சாலங் குறிச்சிக் கட்ட பொம்மு துரைக்கும் ஊமைத்துரைக் கும் உதவி செய்யவில்லை. இடம் கொடுக்கவும் இல்லை.

எ ன் ன ல் கட்டப்பட்டிருக்கிற சத்திரங்களுக்கும் கோவில்களுக்கும் விடப்பட்டிருக்கிற தருமசாசனங்கள் மற். றவர்களுக்குக் கொடுத்திருக்கிற தஸ்தா வேஜூகளில் கண்ட சொத்துக்கள் யாவும் அவரவர்களே அனுபவிக்கும் படிச் செய்ய வேண்டும்.

என் தம்பி சின்ன மருது சேர்வைக்காரனுக்கும் எனக் கும் தாய் ஒருத்தி; தகப்டன்மார் இருவர். மேற்படி யானுக்கு ஜமீனில் யாதொரு பாத்தியமும் இல்லை. மேற்படியானை மானேஜராக வைத்திருந்தேன்; அவன் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு ஊமைத்துரைகளுக்கு அடைக்கலங் கொடுத் துக் காத்ததாகச் சொல்கிறதைத் தவிர, எனக்கு யாதொன் றும் தெரியாது.

நான் கிஸ்தி பாக்கியை நிறுத்தாமல் செலுத்தி வந்திருக் கிறேன். என் தம்பி சின்ன மருது சேர்வைக்காரனை மூன்று நாளைக்கு முன் தூக்கிலிட்டதால், என்னைத் துக்காமன்