பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

நிறுத்திவைக்கக் கூடாது. நான்யாதொருபாவமும் தெரியாத வகை இருந்தும், கம்பெனியாருக்கு யாதொரு பொல்லாங் கும் செய்யாவதனக இருந்தும், என்னை வலத் தொடையில் துப்பாக்கியினுல் சுட்டு விட்டதல்ை என்னையும் தூக்கிலிட வேண்டுவது அவசியமாயிருக்கிறது.

அப்படி செய்யாமை தரும சாஸ்திரத்திற்கு ஏற்காது. நான் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். சிவபெரு மானே, கேட்கவும். கம்பெனியாரவர்கள் என்னை அநியாய மாய்த் துரக்குகிறபடியால், என்னுடைய ஜமீன் பூராச் சொத் துக்களையும் வேறே யாருக்காவது கொடுத்தாலும் ஜமீனை ஆளுகிற எவர்களும் விருத்தியடையாமல் போவார்களாக ! சிவபெருமானே, நீ வரங் கொடுக்க வேண்டும்.

என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும். என்னுடைய ஜமீன் சொத்துக்களை யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தி யிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும், நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதிமொழி தர வேண்டும். அதற்கு அத்தாட்சி யாகக் கவர்னமெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தரவேண்டும். இது சத்தியம் !

என் வாரிசுகளின் விவரம்: என் மனைவியின் பெயர் ராக் காத்தாள். அவள்தான் பட்டஸ்திரி. அவளுக்கு ஒரு மகள் உண்டு. பெயர் மருதாத்தாள்.

நானும் என் மூத்த சம்சாரமும் சிறுவயவில் இருந் தோம். அவள் பிரசவத்திற்காக அவளுடைய தகப்பனர் ஊராகிய அரசனேந்தல் அரண்மனையில் போய் இருக்கிருள். போய் மூன்று மாதமாகிறது.

இரண்டாம் மனைவி பெயர் கருப்பாயி ஆத்தாள். மேற்

படியாளுக்கு கறுத்தையா என்ற ஒரு மகனும் கண்ணுத் தாள் என்ற ஒரு பெண்ணும் உண்டு. இரண்டு பேருக்கும்