பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்கள் நகரங்களுக்கு வெளியே குடிசைகளில்தான் வசித்தார்கள். அவர்களது அடிமை நிலைமை போய்விடவில்லை.

ஆகவே, ஆல்பர்ட் லிதுலி தலைமையில் மீண்டும் அமைதிப் போர் தொடங்கியது. ஆனால், 1961 டிசம்பரில் சூழ்நிலையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது.

நெல்சன் மண்டேலா தோற்றுவித்த ‘தேசத்தின் ஈட்டி’ (ஸ்பீயர் ஆஃப் நேஷன்) என்ற அமைப்பு செயலில் இறங்கியது. இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர். நகரங்கள், அரசு அலுவலகங்கள், மின் பகிர்வு மையங்கள் போன்ற முக்கிய இடங்களைக் குண்டுகள் வீசித் தகர்த்தார்கள். போராட்டங்கள் வலுப்பெற்றன. புயலெனச் சீற்றம் கொண்டனர் மக்கள். இவ் எழுச்சி காரணமாக மண்டேலா கைதுசெய்யப்பட்டார்.

விசாரணை நடந்தது. 1964 இல் நெல்சன் மண்டேலா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

நெருக்கடி நேரத்தில், அரசியல் போராட்டத்தில், திடீரெனத் தலைகாட்டிய ‘ஹீரோ’ இல்லை நெல்சன் மண்டேலா. அடி நாளிலிருந்தே தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டு, திட்டமிட்டுப் பயின்று தனது திறமைகளை வளர்த்து, மக்களின் நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தியாகி அவர்.


12 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா