பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆப்பிரிக்க இளைஞர் அக்குழுவின் தலைவரானார். அறுபது இளைஞர்கள் உறுப்பினர்கள். அவர்களில் மண்டேலாவும் ஒருவர்.

அவர்கள் அனைவரும் விட்வாட்டர்ஸ்ரேண்ட் வட்டாரத்தில் வசித்தவர்கள். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதே அக்குழுவின் நோக்கமாகும்.

ஆப்பிரிக்காவின் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசித்த லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களுடன் கலந்து பழக வேண்டும். படிப்பறிவில்லாத தொழிலாளர்கள், மற்றும் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள், பல்வேறு தொழில்கள் செய்து வாழும் மக்கள் அனைவரிடமிருந்தும் தேசிய காங்கிரஸ் இயக்க வலுவும் போராட்ட சக்தியும் பெற வேண்டும் என்று அவ்இளைஞர்கள் தீர்மானித்தார்கள்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைமை பழமைப் போக்கிலேயே முடங்கிக் கிடக்கிறது; அதன் அரசியல் நடவடிக்கைகள் மரபு ரீதியான தன்மையிலேயே செயலாற்றப்படுகின்றன; அன்றைய அரசாங்கத்துக்கு மனுக்கள் எழுதி அனுப்பிக் கொண்டிருப்பதே போதுமானது என்று அது கருதுகிறது.

நாடு விடுதலை உணர்வுடன் முன்னேறி வளர்வதற்கு காங்கிரசின் செயல்பாடுகள் தகுந்தனவாக இல்லை. இவையே இளைஞர் அணி முன்வைத்த முக்கிய வாதம் ஆகும்.

‘பழமையான பாதுகாவலர்’களுக்கு எதிராக லெம்பிடேயும் அவரது சகாக்களும் தீவிர ஆப்பிரிக்க தேசியம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.

தேசியத் தன்னாட்சித் திட்டம் எனும் கொள்கையின் அடிப்படையில் தங்கள் செயல்முறைகளை வகுக்க முனைந்தார்கள். அதற்காக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் அணி என்ற


வல்லிக்கண்ணன் • 15