பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வழக்கறிஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட அவருக்குத் தொல்லை தர முன் வந்தார்கள்.

கம்யூனிசத்தை அடக்கி ஒடுக்குவதற்காகச் சட்டத்தை எதிர்த்து மண்டேலா கிளர்ச்சி செய்ததன் பயனாக அவர் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார் அல்லவா? அதைக் காரணம் காட்டி, மண்டேலா வழக்கறிஞராகத் தொழில் புரியக் கூடிய தகுதியை இழந்துவிட்டார். ஆகவே வழக்கறிஞர் பட்டியலிலிருந்து அவர் பெயரை நீக்க வேண்டும் என்று டிரான்ஸ்வால் நகரச் சட்ட சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டுக்கு (உச்ச நீதிமன்றத்துக்கு) மனுச் செய்தார்கள்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிப் பொறுப்பை வகித்தவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மண்டேலா அவரது கறுப்பின மக்களுக்குத் தொண்டு புரியும் நோக்கத்துடனேயே செயலாற்றுகிறார். மதிப்பு மிகுந்த வழக்கறிஞர் அணியில் இடம் வகிக்கும் தகுதியை இழக்கக் கூடிய தன்மையில் அவர் இது வரை எதுவும் செய்யவில்லை; ஆகவே அவரை நீக்க வேண்டும் எனக் கோருவது சரியல்ல என்று நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.


22 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா