பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4

1950களில் மண்டேலா முக்கியமான பணிகள் பலவற்றைச் செயல்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார்.

நாட்டின் மேற்குப்பகுதிகளில் மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து அகற்றப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்துக்கு மண்டேலா தலைமை வகித்து மக்களை ஊக்கப்படுத்தினார்.

மக்களுக்குப் பாதகமான ஒரு கல்வித் திட்டத்தைப் புகுத்த அரசு முனைந்தது. அதை எதிர்ப்பதிலும் மண்டேலா முக்கியமான பங்கு வகித்தார்.

1952இல் தேசிய காங்கிரஸ் முக்கியமான ஒரு பொறுப்பை மண்டேலாவிடம் ஒப்படைத்தது. இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், அதன் உறுப்பினர்களுடன் சக்தி வாய்ந்த தொடர்பினைக் கொண்டிருக்க விரும்பியது. அதற்குப் பொதுக் கூட்டங்களின் துணை இல்லாது, வேறு வழிகளில் எவ்வாறு தொடர்புகளை வளர்க்கலாம் என்று ஆக்கபூர்வமான திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனத் தலைமை கருதியது. இப் பொறுப்பு நெல்சன் மண்டேலாவிடமே தரப்பட்டது.


வல்லிக்கண்ணன் • 23