பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணியில் முழுமையாக ஈடுபட்டார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவரும் அவருடைய சகாக்களும் நிர்ணயித்த பணிகள் அவை. அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோம் என்ற உறுதியோடு களம் இறங்கினார் மண்டேலா.

1991இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் முதலாவது தேசிய மாநாடு தென் ஆப்பிரிக்காவுக்குள்ளேயே கூட்டப்பட்டது. அப்படி மாநாடு எதுவும் நடத்தக் கூடாது என்று பலப்பல ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய ஜீவிய நண்பரும் தொழில் கூட்டாளியுமான ஆலிவர் டாம்போ அந்த அமைப்பின் தேசியத் தலைவரானார்.

பெருந்தன்மை, நம்பிக்கை, சுயகட்டுப்பாடு ஆகிய பண்பு களின் உருவகமாக விளங்கிய மண்டேலா உலக மக்களின் மதிப்பையும் போற்றுதலையும் பெற்ற தலைவராக ஒளிரலானார்.


வல்லிக்கண்ணன் • 31