பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

மண்டேலா ஒளி நிறைந்த வாழ்க்கைப் பகுதியை அடைவதற்கு முன்பு கொடுமைகள் நிலவிய இருண்ட கால கட்டத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர் சிறைக்குள் அடைபட்டிருந்த இருபத்து ஏழு வருடங்களும் அவருக்கு வேதனையும் மன உளைச்சலும் மிகுதியாகத் தந்த இருண்ட காலமே ஆகும்.

சிறையில் அனைத்துக் கைதிகளும் நான்கு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். அப்பிரிவுகள் ஏ,பி,ஸி.டி என்று குறிக்கப்பட்டன. ‘ஏ’ வகுப்புக் கைதிகள் உயர்ந்த நிலையினராகக் கருதப்பட்டார்கள். அவர்களுக்கு மிக அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டன. ‘டி’ வகுப்புக் கைதிகள் கடை நிலையினராகவும், குறைவான சலுகைகளுக்கு உரியவர்களாகவும் மதிக்கப்பட்டார்கள்.

அரசியல் கைதிகள் அனைவரும் இயல்பாகவே ‘டி’ வகுப்பிலேயே சேர்க்கப்பட்டார்கள். அவர்களை ‘பாதுகாப்புக் கைதிகள்’ என்று அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். மண்டேலா ‘டி’ வகுப்புக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார்.


32 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா