பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசையையும் அதிகாரிகள் கண்டு திருப்திப்படுவதை அவர் விரும்பியதில்லை.

எனவே, அவர் நிதானமாக அவருடைய அறைக்குத் திரும்பி நடப்பார். குடும்பத்திலிருந்து வந்த கடிதத்தைப் பிரித்துப் படிப்பதைவிட முக்கியமான சில காரியங்களைத் தான் கவனித்தாக வேண்டியிருப்பது போன்ற பாவனையோடு அவர் நடந்து கொள்வார்.

முதல் சில மாத காலத்தில், அவர் மனைவி வின்னியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அது மிக அதிகமாக ‘சென்சார் செய்யப்பட்டு’ எழுத்துக்கள் சிறிது கூடத் தெரியாத அளவுக்கு மைபூசப்பட்டிருந்தது.

சட்ட விரோதமான பகுதிகள் என்று சென்சார்கள் பல இடங்களை அழுத்தமாக மை தடவி மறைத்துவிடுவது தீவுச் சிறையில் நடைமுறையாக இருந்தது.

ஆனால், கைதிகள் தண்ணீர் கொண்டு மைப்பூச்சை நீக்கிவிட்டு, அடிக்கப் பட்டிருந்த செய்திகள் யாவை என்று படித்துத் தெரிந்து கொள்வது சாத்தியமாக இருந்தது. அதை அறிந்து அதிகாரிகள் தங்கள் முறையை மாற்றிக்கொண்டார்கள்.

ஆட்சேபகரமான எழுத்துக்கள் என்று அவர்கள் கருதிய பகுதிகளை ரேசர் பிளேடால் அகற்றினார்கள். இப்படி முழுப் பாராக்கள் பல ஒரு கடிதத்தில் நீக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு தாளின் இரண்டு பக்கங்களிலும் கடிதம் எழுதப்பட்டிருக்கும்.

இப்படி ஒரு பக்கத்தில் உள்ள விஷயத்தை வெட்டும் போது, அடுத்த பக்கம் எழுதப்பட்டிருக்கும் விஷயம் தானாகவே அகன்றுவிடும். இவ்விதம் கடிதங்களை வெட்டிக்குதறிய துண்டுகளாகக் கைதிகளிடம் கொடுப்பதில் அதிகாரிகள் மனமகிழ்வு கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்தக் கண்காணிப்பு முறையினால் கடிதங்கள் தருவதற்குக் காலதாமதம் ஏற்படுவதும் நிகழ்ந்தது. சென்சார் செய்யும் சிறை


வல்லிக்கண்ணன் • 39