பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் கைதிகள் என்றால், அவர்கள் தங்களைப் பார்த்துப் பேச வருகிறவர்களைத் தொடக் கூடாது என்ற கண்டிப்பான கட்டுப்பாடு வழக்கத்தில் இருந்தது. வருகையாளரும் கைதியும் ஒரே அறையில் இருந்தாலும் கூட அவர்கள் விலக்கி வைக்கப்பட்டிருப்பார்கள்.

வருகைக்கு உரிய நாள்களை அதிகாரிகள் முன்கூட்டியே நிர்ணயித்து, போதிய கால அவகாசத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க மாட்டார்கள். திடீரென்று ஒருநாள் அவர்கள் மனைவியைத் தொடர்பு கொண்டு

‘நீங்கள் நாளை உங்கள் கணவரைச் சந்திக்கலாம். அதற்கான அனுமதி தரப்படுகிறது!’ என்று அறிவிப்பார்கள். இதனால் தொல்லைகளே அதிகரிக்கும். சிலசமயம் வருகை சாத்தியப்படாமலே போவதும் உண்டு.

குடும்ப உறுப்பினர் அனுமதி கிடைத்ததும் உடனடியாகப் புறப்பட்டு வரக்கூடிய வசதி பெற்றவராக இருந்தால் கூட, அதிகாரிகள் வேண்டுமென்றே நச்சுப்படுத்தும் இயல்பினராக இருப்பது உண்டு.

சம்பந்தப்பட்டவர் பயணம் செய்வதற்குரிய விமானம் புறப்பட்டுச் சென்ற பிறகு அதிகாரிகள் அவரிடம் அனுமதிச் சீட்டை வழங்குவார்கள்.

சிறைப் பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் கேப் நகரை விட்டுத் துாரா தொலைவிலேயே வசித்தார்கள்.

அவர்களிடம் பயணத்துக்குத் தேவையான பணமும் இராது. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள், அனுமதிச் சீட்டுப் பெற்ற பிறகும், சிறை இருக்கும் இடத்துக்கு வந்து கைதிகளைக் சந்திப்பது நடைமுறையில் அனுபவ சாத்தியம் இல்லாததாகவே இருந்தது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த கைதிகள் அநேகர் வருடக் கணக்கில் அவரவர் மனைவிமாரைக் காணமுடியாத நிலை நீடித்தது. ராபன் தீவுச் சிறையில் அடைபட்டிருந்தவர்களில் பல


வல்லிக்கண்ணன் • 41