பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேர் தொடர்ந்து பல ஆண்டுகாலம் ஒரு வருகையாளரைக் கூடக் கண்டதில்லை.

தொட்டுப் பேச இயலாத சந்திப்புக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறையோ குறுகலானது. ஜன்னல் எதுவும் இல்லாதது. நெருக்கடியானதும் கூட. ஒரு வரிசையில் ஐந்து பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மறுபுறம் அதே மாதிரி ஐந்து பிரிவுகள். நடுவில் கண்ணாடி மறைப்பு இருக்கும். அந்தக் கண்ணாடி தடிமனாய், ஒளி புகமுடியாததாக, அழுக்கடைந்தும் காணப்படும். பேச்சின் ஒலி புகுந்து செல்வதற்கு ஏதுவாகக் கண்ணாடியில் சிறுசிறு துளைகள் இடப்பட்டிருக்கும்.

கைதிகள் உள்புறம் நாற்காலிகளில் அமர்ந்து பேசுவார்கள். அதே மாதிரி மறுபக்கத்தில் வருகையாளர்கள் இருப்பார்கள். ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்க வேண்டுமெனில், உரக்கக் கத்திப் பேசியாக வேண்டும்.

குறித்த நாளன்று காலையில் மண்டேலா வரவேற்பு அறைக்கு இட்டுச்செல்லப்பட்டார். அறையின் மூலையிலிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்தார். வரப் போகிறவரை எதிர்பார்த்துப் பரபரப்புடன் காத்திருந்தார்.

திடீரென்று ஜன்னலின் மறுபக்கம் கண்ணாடிக்குப் பின்னால் வின்னியின் இனிய முகம் தோற்றம் கொண்டது. தன் மனைவியைத் தொட்டு, அன்பாகச் சில வார்த்தைகள் பேசி, ஒரு சில கணங்களாவது அந்தரங்கமாகப் பொழுது போக்க முடியாமலிருந்தது மாண்டேலாவுக்கு விரக்தியும் வேதனையும் அளித்தது.

அவர்கள் வெகுவாக வெறுத்த நபர்களின் கண்பார்வையில், தூர விலகியிருந்து பேச வேண்டிய நிலைமை இருவருக்கும் சங்கடம் தந்தது.

வின்னி குழந்தை நல அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டாவது தடவை தடை உத்தரவு விதிக்கப்பட்டது. அவர் தன் கணவருடன் ரகசியமாகச்


42 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா