பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுபடுதல் என்று மனித வர்க்கத்தை இரு கூறாக்குகிற சவால்கள் பற்றி நாம் இங்கு பேசுகிறோம்.

யுத்தம், இம்சை, இனவாதம், துன்புறுத்தல், அடக்கி ஒடுக்குதல், ஒரு மனித இனம் முழுமையும் அனுபவிக்கிற கொடிய வறுமை இவற்றையே சாராம்சமாகக் கொண்டுள்ள ஒரு சமூக அமைப்பு முறைக்கு எதிராகப் பொங்கி எழத் துணிந்த எங்களது இலட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாகத்தான் நான் இங்கு நிற்கிறேன்.

உலகப் பரப்பு நெடுகிலும் வசிக்கிற கோடானு கோடி மக்களின் சார்பாக, இன ஒதுக்கலுக்கு எதிரான இயக்கத்தின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன். எங்களுடன் இணைந்து கொண்ட அரசுகள் மற்றும் அமைப்புகள் சார்பாகவும் நிற்கிறேன். தென் ஆப்பிரிக்கா ஒரு நாடு என்ற முறையிலோ, அதன் மக்கள் இனத்தினர் எவரையுமோ எதிர்த்து நாங்கள் போராடவில்லை.

ஆனால், மனிதத்தன்மை இல்லாத ஒரு அமைப்பு முறையை எதிர்த்தும், மனித இனத்துக்கே எதிரான இன ஒதுக்கல் கொள்கை என்ற குற்றத்துக்கு வேகமான ஒரு முடிவை ஏற்படுத்தவுமே நாங்கள் ஒருங்கு சேர்ந்து போராடினோம். கொடுங்கோன்மை, அநீதி ஆகியவற்றை எதிர்த்து நிற்கும் ஆன்ம வேகமும், தன்னலமின்றிப் போராடும் தைரியமும், எங்கள் நாட்டின் உள்ளும் அதற்கு வெளியேயும் வசிக்கும் எண்ணற்ற மக்களுக்கு இருந்தது.

ஒருவருக்கு இழைக்கப்படும் கொடுமை மனிதர்கள் அனைவருக்கும் இழைக்கப்படும் தீமையேயாகும் என அவர்கள் உணர்ந்தார்கள். எனவே, நியாயத்தையும், மனிதப் பொதுமையான ஒரு மாண்பினையும் அடைவதற்காக அவர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றினார்கள்.

வருடக் கணக்கில் அவர்கள் காட்டிய வீரமும் விடாப்பிடியான உறுதியும் நம்பகமானவை. அவற்றை நம்பி இன்று கூட, நமது நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்கதான மானுட


48 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா