பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றியைக் கொண்டாடுவதற்காக மனிதகுலம் முழுமையும் ஒன்று திரண்டு உற்சாகமாகக் கைகோத்து நிற்கும் நன்னாளைக் கணித்துக் கூற முடியும்.

அந்தக் கணம் வந்து சேரும்போது, இன வாதம், இன ஒதுக்கல், சிறுபான்மையினரான வெள்ளையரின் ஆதிக்கம் ஆகியவற்றின் மீது நாம் அடையக் கூடிய பொதுவான வெற்றியை நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து கொண்டாடி மகிழ்வோம்.

அந்த மகத்தான வெற்றி, ஆப்பிரிக்கக் காலனி ஆதிக்கத்தின் ஐந்நூறு வருட வரலாற்றை, போர்த்துகீசிய ராஜ்யம் நிறுவப்பட்ட நாளிலிருந்து தொடங்கிய சரித்திரத்தை, இறுதியான ஒரு முடிவுக்குக் கொண்டு சேர்க்கும்.

உலக வரலாற்றில் அது ஒரு மாபெரும் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும். இனவாதம் எங்கு தலையெடுத்தாலும், எந்த வடிவத்தில் அது தோன்றினாலும் அதை எதிர்த்துப் போராடுவோம் என்று உலக மக்கள் அனைவரும் செய்து கொள்கிற பொதுவான உறுதி மொழியாகவும் அது அமையும்.

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்கோடியில், அனைத்து மனித வர்க்கத்தின் பேராலும் துயரப்பட்டவர்களுக்கு, சுதந்திரம் சமாதானம், மானுட மாண்பு மற்றும் மானுட வெற்றிக்காகத் தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கு, மதிப்பு மிகுந்த வெகுமதி ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்த வெகுமதி பணத்தினால் அளக்கப்படுவது அல்ல. நமது மூதாதையர் வாழ்ந்த தடத்திலேயே நாம் நடைபழகுகிற ஆப்பிரிக்க மண்ணின் உள் ஆழத்தில் உறங்கிக் கிடக்கிற மதிப்பு உயர்ந்த கற்கள் மற்றும் அரிய உலோகங்களின் மொத்தமான விலையைக் கொண்டும் இந்த வெகுமதியைக் கணிக்க முடியாது.

நம் குழந்தைகளின் வளமையாலும் ஆனந்தத்தினாலுமே அதை மதிப்பிட முடியும்; மதிப்பிட வேண்டும். எந்த சமூகத்தி-


வல்லிக்கண்ணன் • 49