பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கள் சொந்த நாட்டின் கரடு முரடான-குழப்பம் நிறைந்த அரசியலிலிருந்து விலகி நின்ற, நார்வே நாட்டின் நோபல் கமிட்டியுடன் இணைந்து, பரிசு பெறுவதில் எனது கூட்டாளியாக விளங்குகிற மிஸ்டர் எஃப்.டபிள்யு. டி கிளெர்க் அவர்களுக்குப் புகழாரம் சூட்டுவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

இனஒதுக்கல் கொள்கையை எங்கள் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் நடைமுறைப்படுத்தியதன் மூலம் பயங்கரமான கொடிய தீங்கு இழைக்கப்பட்டுள்ளது என ஒப்புக் கொள்ளும் துணிவு அவருக்கு இருந்தது.


வல்லிக்கண்ணன் • 53