பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று மனசாட்சி உள்ள மனிதர்கள் அனைவரும் விரும்புவார்களோ அந்த நிலைமையின் உயிர்ப்பிரமாணமாக எங்கள் நாட்டை உருவாக்குவதற்கு இன்றையக் கால வேகத்தை நாங்கள் பயன்படுத்தியாக வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்தும் ஈடுபட்டிருக்கிற செயல்முறைகள் எங்களை அழைக்கின்றன; எங்களுக்கு உந்துதல் தருகின்றன.

நிகழ்ந்து முடிந்து விட்ட விஷயங்களுக்கான ஒரு பாராட்டாக இந்த நோபல் அமைதிப் பரிசு விளங்குகிறது என நாங்கள் நம்பவில்லை.

இன ஒதுக்கல் முறை முடிவு கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிற, இப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற, மக்களின் வேண்டுதலே இது என்று கூறுகிற குரல்களை நாங்கள் கேட்கிறோம்.

அவர்களின் வேண்டுகோளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஜனநாயகம், நீதி, சமாதானம், இனவேற்றுமை இன்மை, ஆண் பெண் என்கிற பேதம் இல்லாமை, அனைவருக்கும் வளமான வாழ்வு, ஆரோக்கியமான சூழ்நிலை, மானிட சமத்துவமும் அனைத்து நாட்டு மக்களின் ஒருமைப்பாடும் ஆகியவை மனித குலம் நீடித்து வாழ்வதற்குத் தேவையான இயல்பான நிலைமையாகும்.

இதை நடைமுறைப்படுத்திக் காட்டுவதற்கான தனித்தன்மை உடைய, வேதனைமிகுந்த அனுபவத்தை எங்கள் நாடு பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த அனுபவம் பூரண சித்தி பெறுவதில் நாங்கள் எங்கள் வாழ்வின் எஞ்சியுள்ள பகுதியையும் அர்ப்பணிப்போம். அந்தக் குரல் எங்களுக்கு அதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.

அக் குரலினால் நெகிழ்ச்சியுற்றும், நீங்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள மேன்மையினால் உந்தப் பெற்றும், நமது உலகத்தைப் புதுப்பிப்பதற்கான முயற்சியில் நாங்களும் எங்களாலான பங்களிப்பைச் செய்வோம் என்று உறுதி


வல்லிக்கண்ணன் • 55