பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறுகிறோம். வருங்காலத்தில் மண்ணின் இழிந்த பிறவி என்று எவருமே விவரிக்கப்பட முடியாத நிலைமை ஏற்பட வேண்டும்.

நோபல் அமைதிப் பரிசு உள்ளடக்கியுள்ள மனிதகுல உன்னத லட்சியங்களுக்குத் தகுந்தபடி வாழ விடாமல் எங்களது அசிரத்தையும் நல்லவனற்றில் நம்பிக்கையற்ற தன்மையும் சுயநலமும் எங்களைத் தடுத்து வைத்திருந்தன என்று எங்களுடைய வருங்காலச் சந்ததியினர் குறைகூறக் கூடிய நிலைமை ஒருநாளும் ஏற்படக்கூடாது.

இனபேதமும் யுத்தமும் நிலவுகிற ஒளியற்ற காரிருளில் கட்டுண்டு கிடக்கிற துயரநிலைமை இனி ஒரு போதும் இருக்கக் கூடாது என்று கூறிய மார்டின் லூதர் கிங் சரியாகவே சொன்னார் என்பதை நம் அனைவரது போராட்டங்களும் நிரூபிக்கட்டும்.

உண்மையான சகோதரத்துவம், அமைதி ஆகியவற்றின் அழகு வைரங்கள் அல்லது வெள்ளி அல்லது தங்கத்தை விட மதிப்பு உயர்ந்தது என்று அவர் கூறியபோது, அவர் வெறும் கனவு காணவில்லை என்பதை நம் அனைவரது முயற்சிகளும் நிரூபிக்கட்டும்.

ஒரு புதிய யுகம் உதயமாகட்டும்,

நன்றி.

இவ்வீர முழக்கமே நோயால் பரிசளிப்பு விழாவின்போது மண்டேலா நிகழ்த்திய ஏற்புரை ஆகும்.


56 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா