பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை ஒளிமயமானதாகும். அவருடைய ஆற்றலும், ஆர்வமும், அயரா உழைப்பும், இலட்சிய வேகமும், அவருடைய சொந்த நாட்டின் மக்களை ஈர்த்தது போலவே, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்களையும் வசீகரித்தது. அவரது பெருமைகளை உணர்ந்த மக்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்; பட்டங்களும் பதவிகளும் அளித்துப் பெருமைப்படுத்துவதில் உற்சாகம் காட்டினார்கள்.

இளம் பிராயத்திலிருந்தே மண்டேலா பலவிதமான கவுரவிப்புகளையும் சிறப்புகளையும் பெற்று விளங்கினார். லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மாணவர்கள் மண்டேலாவைத் தங்கள் சங்கத்தின் கவுரவத் தலைவராகத் தேர்ந்தெடுத்துப் பெருமைப்படுத்தினார்கள்.

மறுவருடம், பிரிட்டனில் லீட்ஸ் நகர யுனிவர்சிட்டி மாணவர்கள் மண்டேலாவைத் தங்கள் சங்கத்தின் கவுரவத் தலைவராகத் தேர்வு செய்து மகிழ்ந்தார்கள்.

லீட்ஸ் யுனிவர்சிட்டியில் புதிதாகக் பிடிக்கப்பட்ட ஒரு முக்கிய கதிர்வீச்சிற்கு மண்டேலா கதிரொளி என்று பெயர் சூட்டிப் பெருமைப்பட்டார்கள்.


வல்லிக்கண்ணன் • 57