பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமெரிக்காவில், நியூயார்க் நகரின் நகரக் கல்லூரி கெளரவ சட்ட டாக்டர் பட்டத்தை மண்டேலாவுக்குத் தந்தது.

அயர்லாந்தில், டப்ளின் நகர சபை, எலிசபத் பிரிங்க் உருவாக்கி, நெல்சன் மண்டேலாவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சிற்பம் நகரப் பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது.

‘சர்வதேவ நட்புறவு நட்சத்திரம்’ விருது - தங்கத்தாலான பதக்கம் - ஜெர்மன் ஜனநாயகக் குடியரசால் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.

பிரிட்டனின் ஹார்லோ நகர சவை, நகரத்தின் ஒரு பெரிய ரோடுக்கு நெல்சன் மண்டேலா ரோடு எனப் பெயரிட்டு மகிழ்ந்தது.

பிரிட்டனில் உள்ள முக்கியமான தொழிற்சங்கங்களில் ஒன்று, சங்கத்தின் நிர்வாகக் குழு கூடுகிற அறைக்கு ‘நெல்சன் மண்டேலா அறை’ எனப் பெயரிடுவதற்காக விசேஷ விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.

கிரீன்விச் நகரின் ‘லண்டன் பரோ’ என்ற பகுதியின் குடிஉரிமை மண்டேலாவுக்கு அளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை, அதன் முதலாவது சிமோன் பொலிவார் சர்வதேசப் பரிசை, நெல்சன் மண்டேலாவுக்கும், ஸ்பெயின் நாட்டின் கிங் ஜூவான் கார்லோசுக்கும் கூட்டாக வழங்கியது. அதற்கான விழா வெனிசுலா நாட்டில் காரகாஸ் என்ற இடத்தில் நடைபெற்றது.

பிரிட்டனில் லீட்ஸ் நகர சபை, சபையின் மைய ஹாலை ‘நெல்சன் மண்டேலா கார்டன்ஸ்’ என்று பெயரிட்டுப் பெருமை கொண்டது.

நெல்சன் மண்டேலாவும் வின்னி மண்டேலாவும் அமெரிக்க நாட்டின் கெளரவப் பிரஜைகளாக ஆக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசின் பன்னிரண்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.


60 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா