பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நெல்சன்
மண்டேலா



நம் காலத்தின் உலகப் புகழ் பெற்ற மாபெரும் அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்களுள் நெல்சன் மண்டேலாவும் ஒருவர் ஆவார்.
தனது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன்னைத் தானே அர்ப்பணித்துக் கொண்டு போராடி, பலவிதமான கொடுமைகளுக்கும் ஆட்பட்டு, வெற்றிகண்ட வீரநாயகர் அவர். தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்காவும் முன்னேற்றத்துக்காகவும் வீரத்துடன் போராடியதால் மண்டேலா இருபத்து ஏழு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடிய துயரங்களை அனுபவித்தார்.

வல்லிக்கண்ணன் • 7