பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்காட்லாந்தின் ஸ்ட்ராத்க்ளைட் யுனிவர்சிட்டி மாணவர்கள் சங்கம் அவரைக் கெளரவ உறுப்பினராகத் தேர்வு செய்து மகிழ்ந்தது.

பெல்ஜியத்தில் விஜ்நெஜென் நகரின் பிரஜா உரிமை அவருக்கு வழங்கப்பட்டது.

ஜெர்மன் ஜனநாயகக் குடியாட்சி, சர்வதேச நட்புரிமை நட்சத்திரம் விருதை அவருக்கு அளித்தது.

அபெர்டீன் நகரின் குடியுரிமை நெல்சன் மண்டேலாவுக்கும் அவர் மனைவி வின்னிக்கும் வழங்கப்பட்டது.

ஜெர்மன் ஜனநயாகக் குடியாட்சியில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு ‘நெல்சன் மண்டேலா பள்ளி’ என்று பெயரிடப்பட்டது.

1985ல் பிரிட்டனின் நெவன்யு அலுவலர் கூட்டமைப்பு, அதன் காமன்வெல்த் தொழிற்சங்க மாணவர் உதவித் திட்டத்துக்கு நெல்சன் மண்டேலா பெயரைச் சூட்டியது.

லண்டனில் ஸ்வுத்வார்க்பரோ அதன் புதிய சாலையை ‘மண்டேலா வழி’ என்று அழைத்துப் பெருமைப்பட்டது.

நாட்டிங் ஹாம் நகரசபை அதன் விளையாட்டுக் கேந்திரத்தில் ஒரு அறைக்கு அவர் பெயரைச் சூட்டியது.

பிரிட்டனில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்கள், மாநகரங்களின் மேயர்கள், மேயர்களுக்குரிய உடை தரித்து லண்டன் மாநகரில் ஊர்வலமாகச் சென்றார்கள். பிரதம மந்திரியைச் சந்தித்து, நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்வதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

லண்டனை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, சமூக மற்றும் பொருளாதார ஆய்வுகளுக்கான மூன்றாவது உலக பவுண்டேஷன் எனும் அமைப்பு, 1985 ஆம் ஆண்டுக்கு உரிய


64 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா