பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1986இல் தென் ஆப்பிரிக்காவின் தேசீயச் சுரங்கத் தொழிலாளர்களின் யூனியன் மண்டேலாவைக் கெளர ஆயுள் காலத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

கறுப்பு நிற மக்களின் முன்னேற்றத்திற்கான தேசீய சங்கம் டுபாய் சர்வதேச மெடலை மண்டேலாவுக்கு அளித்தது.

கவென்ட்ரி நகரசபை தனது புதிய கட்டடத்துக்கு மண்டேலா பெயரை இட்டது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில், அல்பான்சோ காமின் பவுண்டேஷன் அமைதிப் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது.

வேல்ஸ் நாட்டின் ஐல்வின்பரோவின் குடி உரிமை அவருக்கும் வின்னி மண்டேலாவுக்கும் வழங்கப்பட்டது.

ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள உழைப்பாளிகளின் சர்வதேச மையம், சர்வதேச அமைதி மற்றும் சுதந்திரத்துக்கான பரிசை அவருக்கு அளித்தது.

மலேசியாவின் சர்வதேச ஆய்வுக் குழுவினர் அமைப்பு மூன்றாம் உலகப் பரிசை நெல்சன் மற்றும் வின்னி மண்டேலாவுக்கும் இணைந்து வழங்கியது.

ஸிம்பாப்வே யுனிவர்சிட்டியின் கெளரவ சட்ட டாக்டர் பட்டம் தரப்பட்டது.

இங்கிலாந்தில், லெய்செஸ்டர் நகரப் பூங்காவுக்கு மண்டேலா பெயர் இடப்பட்டது.

பிரிட்டனின் கடலோடிகளது தேசிய யூனியன் வின்னி, நெல்சன் மண்டேலா இருவருக்கும் கெளரவ உறுப்பினர் பதவி அளித்து மகிழ்ந்தது.

ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில், தென் ஆப்பிரிக்கத் தூதரகம் அமைந்துள்ள வீதியின் பெயர் மண்டேலா வீதி என மாற்றி அமைக்கப்பட்டது.


66 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா